நோபல் பரிசுக்கு தகுதியானவர் டிரம்ப்: தென் கொரிய அதிபரின் சர்டிபிகேட்!

அமெரிக்க அதிபர் டிரம்ப் நோபல் பரிசுக்கு தகுதியானவர் தான் என தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் தெரிவித்துள்ளார்.
 | 

பல்வேறு எதிர்ப்புகளை மீறி, வடகொரியா தொடர்ந்து அணு ஆயுத மற்றும் ஏவுகணை சோதனைகளை நடத்தி வந்தது. இதனால் தென் கொரியா உள்ளிட்ட அண்டை நாடுகளில் போர் பதற்றம் நிலவி வந்தது. எச்சரிக்கை விடுத்தும் அணு ஆயுத சோதனைகளை தொடர்ந்ததால் ஐ.நா, அமெரிக்கா உள்ளிட்ட நாடுகள் வடகொரியா மீது பல்வேறு பொருளாதாரத்தடைகளை விதித்தன.

இவ்வாறாக போர் மூளும் சூழ்நிலையில் இருந்த வடகொரியா தென் கொரியாவுடன் நட்பு பாராட்டியுள்ளது. கடந்த ஏப்ரல் 27ம் தேதி இருநாட்டுக்கும் பொதுவான எல்லையான பான்முன்ஜோமில் இரண்டு நாட்டு தலைவர்களும் கலந்துகொள்ளும் உச்சி மாநாடு நடைபெற்றது. இரு நாட்டுக்கும் இடையேயான நட்புறவு, அமைதிக்கான ஒப்பந்தங்கள் கையெழுத்தாகின. 

65 ஆண்டுகளுக்கு பிறகு கொரிய அதிபர்களின் சந்திப்பு இந்த சந்திப்பு நிகழ்ந்தது குறிப்பிடத்தக்கது. விரைவில் அமெரிக்கா அதிபர் டிரம்ப்-வடகொரியா அதிபர் கிம் ஜாங் உன் சந்திப்பு அரங்கேற இருக்கிறது. 

இந்நிலையில் தென் கொரிய அதிபர் மூன் ஜே இன் சமீபத்தில் நடந்த கூட்டத்தில் பேசியபோது, "வடகொரியா, தென் கொரியா இணைந்ததற்கு அமெரிக்க அதிபர் டிரம்ப்-ம் ஒரு காரணமாக இருந்துள்ளார். எனவே அவருக்கு நோபல் பரிசு கொடுக்கலாம். நோபல் பரிசுக்கு அவர் தகுதியானவர் தான்" என பேசியுள்ளார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP