சிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல ட்ரம்ப் சதி!- வெள்ளை மாளிகை மறுப்பு 

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தை கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை அதிபர் மாளிகை மறுத்துள்ளது.
 | 

சிரியா அதிபர் ஆசாத்தை கொல்ல ட்ரம்ப் சதி!- வெள்ளை மாளிகை மறுப்பு 

சிரியா அதிபர் பஷர் அல் ஆசாத்தை கொல்ல அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சதி திட்டம் தீட்டியதாக அமெரிக்க பத்திரிகையாளர் எழுதிய புத்தகத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது. இந்தக் குற்றச்சாட்டினை அதிபர் மாளிகை மறுத்துள்ளது.

அமெரிக்க புலனாய்வு பத்திரிகையாளரான பாப் வுட்வார்ட் 'fear: Trump in the White House' என்ற புத்தகத்தை எழுதி சமீபத்தில் வெளியிட்டார். அதில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் சிரிய அதிபர் பஷார் அல் ஆசாத்தை கடந்த வருடம் கொலை செய்திட சதி திட்டம் தீட்டினார். அதனை அமெரிக்க பாதுகாப்புத் துறை அமைச்சர் ஜேம்ஸ் மெட்டிஸ் தடுத்து நிறுத்திவிட்டார் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

இதோடு ட்ரம்ப் மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளையும் இந்தப் புத்தகத்தில் வழியாக அந்தப் பத்திரிகையாளர் முன்வைத்துள்ளார்.  இதன் காரணமாக அந்தப் புத்தகம் பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.  இந்த நிலையில் புத்தகத்தில் ஏற்பட்டுள்ள தகவலை வெள்ளை மாளிகை மறுத்துள்ளது. 

இந்த புத்தகத்தில் கற்பனை கதைகளைவிட அதிகமாக புனைந்து கூறப்பட்டுள்ளது. அமெரிக்க அதிபரை பற்றி மோசமான எண்ணத்தை ஏற்படுத்த வேண்டும் என்ற நோக்கத்துக்காகவே புத்தகம் எழுதப்பட்டுள்ளது என்று வெள்ளி மாளிகைத் தரப்பில் கூறப்பட்டுள்ளது.

இது குறித்து ட்ரம்ப் குறிப்பிடுகையில்,"வுட்வார்டின் புத்தகம் முற்றிலும் பொய் மற்றும் போலி ஆதரங்களால் ஆனது. பாதுகாப்புத் துறை அமைச்சர் எற்கனவே இந்த புத்தகத்தை நிராகரித்துவிட்டார். அந்த புத்தகத்தில் இடப்பெற்றுள்ள மேற்கொள்கள் அனைத்தும் மோசடிகளால் உருவாக்கப்பட்டுள்ளவை. இது குறித்து பேசவே தேவையில்லை" என்று தெரிவித்துள்ளார். 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP