எச்சரிக்கையை மீறி புடினுக்கு வாழ்த்து கூறிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொடர்பு கொண்டு சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது அவர், தனது ஆலோசகர்களின் பலத்த எச்சரிக்கையை மீறி, புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் கூறியதாக தெரிய வந்துள்ளது.
 | 

எச்சரிக்கையை மீறி புடினுக்கு வாழ்த்து கூறிய ட்ரம்ப்

எச்சரிக்கையை மீறி புடினுக்கு வாழ்த்து கூறிய ட்ரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடினை தொடர்பு கொண்டு சமீபத்தில் பேசியுள்ளார். அப்போது அவர், தனது ஆலோசகர்களின் பலத்த எச்சரிக்கையை மீறி, புடின் அதிபராக தேர்ந்தெடுக்கப்பட்டதற்கு வாழ்த்துக்கள் கூறியதாக தெரிய வந்துள்ளது.

ரஷ்ய அதிபர் விளாடிமிர் புடின், 4வது முறை அதிபராக சமீபத்தில் தேர்ந்தெடுக்கப்பட்டார். எதிர்க்கட்சி வேட்பாளர்களை நிற்க விடாமல் செய்தது, வாக்குச்சாவடி மோசடி உள்ளிட்ட பல்வேறு சர்ச்சைகளுக்கு நடுவே ரஷ்ய அதிபர் தேர்தல் நடைபெற்றது. 

ஏற்கனவே, அதிபர் புடின் ஆணையில் அமெரிக்க தேர்தலில் ஹிலாரி கிளிண்டனை தோற்கடிக்க ரஷ்ய ஹேக்கர்கள் பணியாற்றியதாக தெரிய வந்தது. ஆனால், ரஷ்ய ஹேக்கர்கள் குறுக்கிட்டதை அதிபர் ட்ரம்ப் இதுவரைஅங்கீகரிக்கவுமில்லை, கண்டனம் தெரிவிக்கவுமில்லை. மேலும், ரஷ்ய அதிபர் புடினுடன் நெருக்கமான போக்கை கடைபிடிக்க அவர் செய்துவரும் முயற்சிகள் பல கேள்விகளை எழுப்பியுள்ளன. அதிபர் தேர்தல் குறுக்கீடு, சிரிய நாட்டு போர், என பல விவகாரங்களில் புடின் செய்யும் தவறுகளை ட்ரம்ப் சுட்டிக்காட்ட தயங்கி வருகிறார். 

இந்நிலையில், பிரிட்டன் நாட்டில், முன்னாள் ரஷ்ய உளவாளி மற்றும் அவரது மகள் ரசாயன விஷத்தால் தாக்கப்பட்ட சம்பவத்தில், ட்ரம்ப் இதுவரை எந்த கருத்தும் தெரிவிக்கவில்லை. இதில் பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி ஆகிய நாடுகள் ரஷ்யாவுக்கு கண்டனம் தெரிவித்தன. அமெரிக்க வெளியுறவுத்துறை செயலாளரும் அதேபோல கண்டனம் தெரிவித்தார். ஆனால், அடுத்த நாளே அவர் பணி நீக்கம் செய்யப்பட்டார். ரஷ்யாவை விமர்சித்த காரணத்தால் அவர் பணிநீக்கம் செய்யப்ட்டதாகவும் ஒரு தரப்பில் கூறப்படுகிறது.

இந்நிலையில், அதிபர் புடினை, ட்ரம்ப் தொலைபேசியில் தொடர்பு கொண்டு பேசியுள்ளார். அப்போது அவர், பல விஷயங்களை பற்றி பேசியதாக கூறப்பட்டாலும், முக்கியமாக, பிரிட்டனில் நடந்த ரசாயன விஷ தாக்குதல் குறித்து புடினுக்கு கண்டனம் தெரிவிக்க ட்ரம்பின் ஆலோசகர்கள் அறிவுறுத்தினார்களாம். ஆனால், ட்ரம்ப் அதுபற்றி புடினிடம் எதுவும் கூறவில்லை என விஷயம் தெரிந்தவர்கள் கூறுகின்றனர். குறிப்பாக ட்ரம்பின் தேசிய பாதுகாப்பு ஆலோசகர்கள், புடின் தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவிக்க வேண்டாம் என எச்சரித்தனராம். 

அப்படி வாழ்த்தினால் அது சர்ச்சைக்குரிய ரஷ்ய தேர்தலை அங்கீகரிப்பது போல ஆகிவிடும் என்ற காரணத்தால் அவர்கள் இவ்வாறு அறிவுறுத்தியுளளனர். மேலும், ட்ரம்ப் வாழ்த்தாமல் இருந்தால், அமெரிக்க தேர்தலில் குறுக்கிட்டது, பிரிட்டனில் நடந்த தாக்குதல் போன்றவற்றை கண்டிக்கும் போக்கில் அது அமையும் என அவர்கள் எதிர்பார்த்தனராம். இதனால், பேப்பரில் பெரிய பெரிய எழுத்துக்களில், "புடினை வாழ்த்தக் கூடாது" என எழுதி அதிபர் ட்ரம்பின் முன் வைத்திருந்தனராம். ஆனால் அதையெல்லாம் மீறி, ட்ரம்ப் புடினுக்கு தேர்தலில் வெற்றி பெற்றதற்கு வாழ்த்துக்கள் தெரிவித்தாராம். புடினை வாழ்த்தியது மற்றும், சர்வதேச அளவில் பரவலாக பேசப்படும் பிரிட்டன் தாக்குதல் குறித்து ஒரு வார்த்தை கூட அவர் பேசாதது, தேசிய பாதுகாப்பு ஆலோசகர்களுக்கு கடும் அதிருப்தியை ஏற்படுத்தியுள்ளதாம். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP