அரசு முடக்கத்தின் நடுவே ஸ்விஸ் பயணத்தை ரத்து செய்தார் ட்ரம்ப்!

அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நடவடிக்கையால் அந்நாட்டு அரசு முடங்கியுள்ள நிலையில், ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் டாவோஸ் சர்வதேச பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ளும் திட்டத்தை அவர் செய்துள்ளார்.
 | 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப், அந்நாட்டின் தெற்கு எல்லையில் சுவர் கட்ட வேண்டும் என நிதி கோரி வருகிறார். சுமார் 5 பில்லியன் டாலர்களை ட்ரம்ப் கோரியுள்ள நிலையில், அதை அவருக்கு வழங்க நாடாளுமன்றம் மறுத்துள்ளது. சுவர் கட்டும் திட்டத்தால் எந்த பயனும் இல்லையென வல்லுநர்கள் எச்சரித்து வந்த நிலையில், அதற்கான ஆதரவு நாளுக்கு நாள் குறைந்து கொண்டே வருகிறது. ஆனால், விடாப்பிடியாக, சுவருக்கு நிதி கொடுத்தால் தான், அமெரிக்க அரசை நடத்த பயன்படும் சம்பள பட்ஜெட்டை நிறைவேற்ற விடுவோம் என ட்ரம்ப் மற்றும் அவரது குடியரசு கட்சி எம்.பி.க்கள் சிலர் பட்ஜெட் மசோதாவை தடுத்து வைத்துள்ளார்.

அமெரிக்க அரசின் பல்வேறு துறைகள், இதனால் நிதி இல்லாமல் முடங்கி உள்ளன. இந்நிலையில், ஸ்விட்சர்லாந்தில் நடக்கும் வருடாந்திர டாவோஸ் பொருளாதார மாநாட்டில் கலந்துகொள்ள ட்ரம்ப் செல்ல இருந்த நிலையில், தனது பயணத்தை ரத்து செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். இது குறித்து ட்விட்டரில் அவர், "எல்லைப் பாதுகாப்பை அதிகரிக்க எதிர்கட்சி மறுத்து வருவதால், நாட்டின் பாதுகாப்புக்கு ஆபத்து ஏற்பட்டுள்ளது. இந்த நிலையில், ஸ்விட்சர்லாந்தில் நடைபெறும் முக்கியமான சர்வதேச பொருளாதார மாநாட்டில் என்னால் கலந்து கொள்ள முடியாது" என எழுதினார். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP