ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம் ரத்து: ட்ரம்ப் அதிரடி

ரஷ்யாவுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

ரஷ்யாவுடனான அணுஆயுத ஒப்பந்தம் ரத்து: ட்ரம்ப் அதிரடி

ரஷ்யாவுடன் அமெரிக்க அரசு மேற்கொண்ட அணு ஆயுத ஒப்பந்தத்தில் இருந்து விலகப்போவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.

முந்தைய அதிபர்களை விட ரஷ்யாவுடன் நெருக்கமான உறவை கடைபிடித்து வருகிறார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப். இந்நிலையில், 1987ம் ஆண்டு அமெரிக்க அரசும் ரஷ்ய அரசும் செய்து கொண்ட அணுஆயுத ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா விலகப் போவதாக தெரிவித்துள்ளார். 

நெவாடா மாகாணத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய ட்ரம்ப், ரஷ்யா பலமுறை இந்த ஒப்பந்தத்தை மீறியுள்ளதாக குற்றம் சாட்டினார். "பல ஆண்டுகளாக ரஷ்யா இந்த ஒப்பந்தத்தை மீறி வருகிறது. அதனால், இந்த ஒப்பந்தத்தில் இருந்து அமெரிக்கா வெளியேற போகிறது. அந்த ஆயுதங்களை நாம் உருவாக்க போகிறோம்" என்று ட்ர்மப் பேசினார். 

1987ம் ஆண்டு வரையப்பட்ட 'நடு ரக அணு ஆயுத ஒப்பந்தத்தின்' படி, அப்போதைய சோவியத் யூனியன் மற்றும் அமெரிக்கா, 300 மைல் முதல் 3400 மைல்கள் தூரம் வரை சென்று தாக்கும் ஏவுகணைகளை சோதனை செய்ய தடை விதிக்கப்பட்டது. கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணைகள், க்ரூஸ் ரக ஏவுகணைகள் என அனைத்தையும் உற்பத்தி செய்யவும், சோதனை செய்யவும், பயன்படுத்தவும் இந்த ஒப்பந்தம் தடை விதித்திருந்தது.

ஆனால், இந்த ஒப்பந்தத்தை இரு நாடுகளும் சரியாக பின்பற்றவில்லை என நீண்ட காலமாக மாறி மாறி குற்றம் சாட்டி  வருகின்றன. 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP