அவசரகால நிதியை வைத்து எல்லையில் சுவர் கட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்காக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிவந்த தொகையை நாடாளுமன்றம் வழங்காததை தொடர்ந்து, அவசரகால நடவடிக்கை எடுத்து, சுவர் கட்ட உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.
 | 

அவசரகால நிதியை வைத்து எல்லையில் சுவர் கட்டும் ட்ரம்ப்!

அமெரிக்க எல்லையில் சுவர் கட்டுவதற்காக அந்நாட்டின் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் கோரிவந்த தொகையை நாடாளுமன்றம் வழங்காததை தொடர்ந்து, அவசரகால நடவடிக்கை எடுத்து, சுவர் கட்ட உள்ளதாக வெள்ளை மாளிகை தகவல் தெரிவித்துள்ளது.

மெக்சிகோவில் இருந்து சட்டவிரோதமாகக் குடியேறுபவர்களை தவிர்க்க, அமெரிக்காவின் தெற்கு எல்லையில் மாபெரும் சுவர் எழுப்ப உள்ளதாக அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்திருந்தார். இதற்காக, மெக்சிகோ நிதி வழங்கும் என்றும் அவர் தேர்தலின் போது உறுதி அளித்திருந்தார். இரண்டு ஆண்டுகளாக, இது குறித்து எந்த நடவடிக்கையும் எடுக்காத நிலையில், தற்போது ட்ரம்ப் தரப்பில் சுவர் கட்ட தீவிர முயற்சி எடுக்கப்பட்டு வருகிறது. கடந்த ஆண்டின் இறுதியில், சுவர் கட்ட நிதி வழங்காததால், அமெரிக்க அரசு துறைகள் இயங்கும் சம்பள பட்ஜெட்டை ட்ரம்ப் முடக்கினார். 

தற்போது, ஆளும் கட்சியும், எதிர்க்கட்சியும் சேர்ந்து சம்பள பட்ஜெட்டை நிறைவேற்ற, ஒப்புதலுக்கு வந்துள்ளனர். இதற்காக இரு தரப்பிலும் கொண்டுவரப்பட்டுள்ள ஒப்பந்தத்தில், எல்லை சுவருக்கான நிதி ஒதுக்கப்படவில்லை. இதனால், கடைசி ஆயுதமாக, வேறுவழியில்லாமல் அவசரகால சட்டத்தை கொண்டு வந்து, எல்லையில் சுவர் கட்ட ட்ரம்ப் திட்டமிட்டுள்ளார். இதற்காக, இயற்கை பேரிடர் உள்ளிட்ட அவசரகாலங்களுக்காக ஒதுக்கப்பட்டுள்ள நிதியை வைத்து சுவர் கட்ட இருக்கிறது ட்ரம்ப் அரசு.

ட்ரம்ப்பின் இந்த திட்டம், அரசியல் சாசனத்திற்கு எதிரானது என எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்துள்ளன. மேலும், சுவர் கட்ட மெக்சிகோ நிதி வழங்குவதாக தனது கட்சியினருக்கு ட்ரம்ப் அளித்த வாக்குறுதிக்கு, அமெரிக்க மக்கள் ஏன் தங்களின் வரிப்பணத்தை செலவிட வேண்டும் என்றும் கேள்வி எழுப்பியுள்ளனர். 

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP