அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'மிருகங்கள்' என்று திட்டிய ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை விலங்குகள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'மிருகங்கள்' என்று திட்டிய ட்ரம்ப்!

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'மிருகங்கள்' என்று திட்டிய ட்ரம்ப்!அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை விலங்குகள் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் விமர்சித்திருப்பது பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

வெள்ளை மாளிகையில் வியாழக்கிழமை (இன்று) அமெரிக்க அதிபர் ட்ரம்ப், சட்டப் பாதுகாப்பு மற்றும் மெக்சிக்கோ எல்லையோர சுவர் குறித்த ஆலோசனையில் ஈடுபட்டார். அப்போது அவர் பேசும்போது,  "சிலர் நமது நாட்டுக்கு வர முயற்சி செய்து கொண்டிருக்கிறார்கள். சிலர் நம் நாட்டில் வந்து இருக்கின்றனர்.  நீங்கள் நம்ப மாட்டீர்கள் அவர்கள் எவ்வளவு மோசமானவர்கள் என்று, அவர்கள் மனிதர்களே அல்ல, அவர்கள் விலங்குகள். அவர்களை விரைவில் நாட்டிலிருந்து தூக்கி ஏறிவோம்" என்று கூறினார்.

ட்ரம்பின் இந்தக் கருத்துக்கு கடும் எதிர்ப்பு எழுந்துள்ளது. இதற்கு அங்குள்ள அரசியல் தலைவர்கள் பலரும் கண்டனம் தெரிவித்தனர்.

அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்தவர்களை 'மிருகங்கள்' என்று திட்டிய ட்ரம்ப்! ஜனநாயகக் கட்சியை சேர்ந்த ஜேர்ட் போலிஸ் கூறும்போது, "புலம் பெயர்ந்தவர்களும் மனிதர்கள்தான். அவர்கள் விலங்குகள் அல்ல. குற்றவாளிகள் அல்ல" என்று ட்ரம்ப்புக்கு கண்டனம் தெரிவித்துள்ளார். 

கலிஃபோர்னியா ஆளுநர் ஜெர்ரி ப்ரவுன், "ட்ரம்ப் புலம்பெயர்ந்தவர்களைப் பற்றி தவறான தகவலை பரப்பிக் கொண்டிருக்கிறார்" என்று கூறியிருக்கிறார்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP