கிளிண்டனின் சாதனையை முறியடித்த ட்ரம்ப்!

அரசுத் துறைகளை முடக்கியுள்ள விஷயத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் சாதனையை தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முறியடித்துள்ளார்.பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, அரசுத் துறைகள் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்தன
 | 

கிளிண்டனின் சாதனையை முறியடித்த ட்ரம்ப்!

அரசுத் துறைகளை முடக்கியுள்ள விஷயத்தில், அமெரிக்க முன்னாள் அதிபர் பில் கிளிண்டனின் சாதனையை தற்போதைய அதிபர் டொனால்டு ட்ரம்ப் முறியடித்துள்ளார்.

சட்டவிரோத குடியேற்றத்தை தடுக்கும் வகையில்,  அமெரிக்கா- மெக்ஸிகோ எல்லைப் பகுதிகளில் தடுப்புச் சுவர் எழுப்பும் அமெரிக்க அரசின் திட்டத்துக்கு, நாடாளுமன்ற மேலவை ஒப்புதல் அளிக்கவில்லை.

இதனால் ஆத்திரமடைந்த அதிபர் ட்ரம்ப், அரசு துறைகளை முடக்கி வைக்கும்படி அதிரடி உத்தரவை பிறப்பித்தார். இந்த உத்தரவு அமலுக்கு வந்து நேற்றுடன் 22 நாள்கள் ஆகின்றன. அமெரிக்க அரசு நிர்வாக வரலாற்றில் இவ்வளவு அதிக நாள்கள் அரசு இயந்திரம் முடக்கப்பட்டிருப்பது இதுவே முதல்முறையாகும்.

இதற்கு முன்பாக, பில் கிளிண்டன் அதிபராக இருந்தபோது, கடந்த 1995 டிசம்பர் - 1996 ஜனவரி மாதங்களில் அரசுத் துறைகள் 21 நாள்கள் முடக்கப்பட்டிருந்தன. இந்த விதத்தில் பில் கிளிண்டனின் சாதனையை ட்ரம்ப் முறியடித்துள்ளார்.

அமெரிக்காவில் தற்போதைய சூழ்நிலை மாறுவதற்கான அறிகுறிகள் எதுவும் தெரியாததால், அரசுத் துறைகளின் முடக்கம் நீடிக்கும் என்றே தெரிகிறது. இதனால் 8 லட்சத்துக்கும் மேற்பட்ட அரசு அதிகாரிகள், அலுவலர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர்.
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP