முன்னாள் உதவியாளரை இனவெறியுடன் நாய் என்ற ட்ரம்ப்: மீண்டும் லீக் சர்ச்சை 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தனது முன்னாள் உதவியாளரை நாய் என குறிப்பிட்டிருப்பத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.
 | 

முன்னாள் உதவியாளரை இனவெறியுடன் நாய் என்ற ட்ரம்ப்: மீண்டும் லீக் சர்ச்சை 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது தனது முன்னாள் உதவியாளரை நாய் என குறிப்பிட்டிருப்பத்து பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மீது தொடர்ந்து பெண்கள் குற்றச்சாட்டுகளை வைப்பது வாடிக்கையாக உள்ளது. அதோடு அவரது பேச்சுகள் ரகசியமாக பதிவுசெய்யப்பட்டு லீக் செய்து சிக்கலை ஏற்படுத்துவதும் தொடர்கதையாக உள்ளது. 

அந்த வகையில், கறுப்பினத்தவரான தனது முன்னாள் உதவியாளர் ஒமரோசாவை ட்ரம்ப் இனவெறியுடன் தாக்கி நாய் என்று குறிப்பிட்டு பேசி சர்ச்சையில் சிக்கியுள்ளார். 

அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முன்னாள் உதவியாளர் ஒமரோசா மனிகால்ட் நியூமேன் இடையே ஆன தொலைபேசி உரையாடல் ஒன்று தற்போது லீக் ஆகியுள்ளது.   அந்த உரையாடல் பதிவு, ஒமரோசாவும் ட்ரம்பும் உரையாடுவதாக அமைந்துள்ளது.

அந்த உரையாடலில் அதிபர் ட்ரம்ப்பின் குரலில், ''நீங்கள் பணியில் இருந்து விலகுவதாக தொலைக்காட்சியில் பார்த்தேன். இங்கே என்ன நடந்து கொண்டிருக்கிறது?'' என்று கேட்கிறது.

அதற்கு ஒமரோசா, ''ஜெனரல் கெல்லி என்னிடம் வந்து, நீங்கள் அனைவரும் நான் பணியில் இருந்து விலக வேண்டும் என்று விரும்புவதாக தெரிவித்தார்'' என்று பதில் அளித்துள்ளார்.

உடனே ட்ரம்பின் குரல் என நம்பப்படுகிற அந்தக் குரல், ''இல்லை... என்னிடம் யாரும் இதைப்பற்றி சொல்லவில்லை. எனக்கு தெரியாது. நீங்கள் பணியில் இருந்து செல்வதை நான் விரும்பவில்லை'' என்று கூறுவதாக அந்த உரையாடல் செல்கிறது. இந்த தொலைபேசி உரையாடளை அமெரிக்க தொலைக்காட்சியான என்.பி.சி.-யில் வெளியிடப்பட்டது. 

இந்நிலையில், இது குறித்து ஆவேசமாக ட்விட்டரில் பதிவிட்டுள்ள ட்ரம்ப் ஒமரோசாவை நாய் என குறிப்பிட்டு பதிவிட்டுள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அவரது பதிவில், ''அழுது புலம்பும் பைத்தியக்கார கீழ்வாழ்க்கை பெண்ணுக்கு நன்மை செய்யலாம் என வெள்ளை மாளிகையில் வேலை அளித்தால் அது சரிப்படவில்லை.  அந்த நாயை உடனடியாக வேலையை விட்டு நீக்கியது மிக சிறப்பான செயல் ஜான் கெல்லி'' என அவர் பதிவிட்டுள்ளார்.

இது குறித்து கருத்து தெரிவித்துள்ள ஒமரோசா, தனக்கு கிடைக்கும் ஒவ்வொறு வாய்ப்பிலும் கருப்பினத்தவரை இழிவு படுத்துவதை ட்ரம்ப் வழக்கமாக வைத்துள்ளார். இந்த விவகாரத்தை வைத்து இனவெறி போரை தான் அவர் தூண்டுகிறார் எனக் கூறியுள்ளார். திரும்பின் இந்தப் பேச்சுக்கு அவரது பலத்தரப்பினரும் கடுமையாக எதிர்ப்பு தெரிவித்து வருகின்றனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP