உச்சநீதிமன்ற நீதிபதி கவனாக்கிடம் மன்னிப்பு கேட்டார் ட்ரம்ப்

வெள்ளை மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவின்போது பேசிய ட்ரம்ப், "நமது நாட்டின் சார்பாக நான் பிரெட்டிடமும் அவரின் குடும்பத்தினரடமும் அவர்கள் அனுபவித்த வலி, வேதனைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன் என்று ட்ரம்ப் தெரிவித்தார்
 | 

உச்சநீதிமன்ற நீதிபதி கவனாக்கிடம் மன்னிப்பு கேட்டார் ட்ரம்ப்

அமெரிக்காவின் நீதிபதியாக பதவியேற்றுள்ள பிரெட் கவனாக்விடம் அதிபர் ட்ரம்ப் மன்னிப்பு கோரினார். 

உச்ச நீதிமன்ற நீதிபதியாக பதவி வகிக்க ஒப்புதல் வழங்கும் வாக்கெடுப்பு, செனட் உறுப்பினர்கள் மத்தியில் நடத்தப்பட வேண்டும் என்று  அமெரிக்க அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ளது. அந்த நடைமுறைப்படி அமெரிக்க செனட் சபையில் நிரந்தர உறுப்பினர்கள் மத்தியில், பிரெட் கவனாக், நீதிபதியாக பதவி வகிப்பதற்கான ஒப்புதல் அளிப்பதற்கான வாக்கெடுப்பு நடைபெற்று, அவருக்கு ஆதரவு 51 வாக்குகள் கிடைத்தன. அவர் திங்கட்கிழமை அமெரிக்காவின் உச்ச நீதிமன்ற  நீதிபதியாக பொறுப்பேற்றார். 

செனட் சபையின் முன் அவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் குற்றச்சாட்டுகளால், நாடு முழுவதும் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. ஆனால், அதையும் மீறி அவர் நீதிபதியாக நியமிக்கப்பட்டார். பாலியல் புகார்களால் தனக்கு ஏற்பட்ட இந்த கசப்பான அனுபவம் தனது பணியை பாதிக்காது என கவனாக் தெரிவித்தார். "செனட்டால் உறுதிசெய்யப்படும் முறை மிகவும் சர்ச்சைக்குரியதாகவும், உணர்ச்சிவயமானதாகவும் இருந்தது . அந்த நடைமுறையைக் கடந்து  வந்து விட்டேன். இனி சிறந்த நீதிபதியாக பணியாற்றுவதில் நான் கவனம் செலுத்துவேன்'' என்று அவர் தெரிவித்தார். 

மன்னிப்புக் கேட்ட ட்ரம்ப்

திங்கட்கிழமை அன்று வெள்ளை மாளிகையில் நடந்த பதவியேற்பு விழாவின்போது பேசிய டொனால்டு ட்ரம்ப், "நமது நாட்டின் சார்பாக நான் பிரெட்டிடமும் அவரின் குடும்பத்தினரும் அவர்கள் அனுபவித்த வலி மற்றும் வேதனைகளுக்காக மன்னிப்பு கோருகிறேன். பொய் மற்றும் வஞ்சனையைக் கொண்டு அவரின் அரசியல் மற்றும் தனிப்பட்ட வாழ்க்கையை அழிப்பதற்கான பிரச்சாரம் மேற்கொள்ளப்பட்டது. ஆனால், அவர் நிரபராதி என நிரூபிக்கப்பட்டுள்ளார்" என்று ட்ரம்ப் குறிப்பிட்டார். 

பிரெட் கவனாக்கை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைத்தவர் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப். அதனை தொடர்ந்து கவனாக் மீது பல பெண்கள் பாலியல் புகார்களை தெரிவித்தனர். ஆனால் அதை கவனாக் மறுத்து வந்தார்.

கடந்த வாரம் கவனாக் மீது எழுந்த புகார்கள் குறித்து எஃப்.பி.ஐ மேற்கொண்ட விசாரணை முடிவுக்கு வந்தது. அந்த அறிக்கை மிக ரகசியமாக வைக்கப்பட்டு, செனட் உறுப்பினர்களுக்கு மட்டுமே காட்டப்பட்டது. இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. அதன்பின் நடைபெற்ற வாக்கெடுப்பில், பிரெட் கவனாக் 51 வாக்குகள் பெற்று வெற்றியடைந்திருந்தார். அதைத்தொடர்ந்து தற்போது நீதிபதியாகவும் பதியேற்றுள்ளார்.

newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP