பொய் செய்தி விருதை அறிவித்தார் டிரம்ப்!

பொய் செய்திகளுக்கு விருது அறிவித்த டிரம்ப்
 | 

பொய் செய்தி விருதை அறிவித்தார் டிரம்ப்!


அமெரிக்க அதிபராக டொனால்ட் ட்ரம்ப் பதவியேற்ற நாளில் இருந்தே செய்திகளுக்கு பஞ்சமில்லை. ஏனோ ட்ரம்புக்கும் ஊடகங்களுக்கு எப்போதுமே ஏழாம் பொருத்தம். ஊடகங்களுடன் மோதல் போக்கை தொடரும் ட்ரம்ப் இதன் உச்சக்கட்டமாக  போலி செய்திகளை வெளியிடும் ஊடகங்களுக்கு விருதுகளை அறிவித்துள்ளார்.  இந்த விருது பட்டியலில் இணைந்துள்ளது   'நியூயார்க் டைம்ஸ்' .

ட்ரம்ப், அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட்டது முதலே அவரை பற்றிய சர்ச்சை செய்திகளுக்கு குறைவில்லை. ஏதேனும் ஒரு விதத்தில் பத்திரிகைகளின் தலைப்பு செய்தியாக வந்து கொண்டிருக்கிறார் ட்ரம்ப். தன்னை பத்திரிகைகள் குறிவைத்து தாக்குதல் நடத்துவதாக குறைப்பட்டு வந்த ட்ரம்ப் ஊடகங்களை சரமாரியாக விமர்சித்து வருகிறார். குறிப்பாக சி.என்.என் செய்தி நிறுவனம், தி நியூயார்க் டைம்ஸ் ஆகிய பத்திரிகைகள் தொடர்ந்து பொய் செய்திகளை வெளியிடுவதாக ட்ரம்ப் பகிரங்கமாக குற்றம்சுமத்தி வந்தார்.

வெறும் விமர்சனங்களை தொடர்ந்து கடந்த ஜனவரி 2-ம் தேதி ட்ரம்ப் தனது ட்விட்டரில், “நான் இந்த வருடத்தின் நேர்மையற்ற, ஊழல் நிறைந்த ஊடகங்களுக்கான விருதை அறிவிக்க இருக்கிறேன். இந்த விருதுகள் பொய் செய்திகள், நேர்மையற்ற, தரமற்ற செய்திகளின் அடிப்படையில் வழக்கப்படுகிறது... தொடர்ந்து காத்திருங்கள்” என்று பதிவிட்டார். 

பரபரப்பை கிளப்பிய இந்த விருது அறிவிப்பின் தொடர்ச்சியாக தற்போது விருது பட்டியலை அறிவித்திருக்கிறார் ட்ரம்ப். இந்த விருது விவரம் குடியரசு கட்சியின் அதிகாரபூர்வ இணைய பக்கத்தில் அறிவிக்கப்பட்டுள்ளது.

விருது பட்டியலில் முதல் இடம் - போலி செய்திகளுக்கான விருது பெற்றுள்ளது பிரபல அமெரிக்க நாளிதழ் நியூயார்க் டைம்ஸ். மேலும் நேர்மையற்ற, பொய் செய்திகள் போன்ற இதர பிரிவுகளின் முறையே ‘ஏ.பி.சி’, ’சி.என்.என்’, ‘தி வாஷிங்டன் போஸ்ட்’ போன்ற பத்திகைகளும் இடம் பெற்றுள்ளன.

அமெரிக்க அதிபர் ஒருவர் ஊடகங்களை இப்படி பகிரங்கமாக விமர்சிப்பதும், மோசமான விருதுகளை அறிவிப்பதும் இதுவே முதல் முறை என்பது குறிப்பிடத்தக்கது. விமர்சனங்களை ஏற்கும் பக்குவம் இல்லாத மனநிலையே இதற்கு காரணம் என்று உலகம் முழுவதும் பரவலான விமர்சனத்தை பெற்றுள்ளார் அமெரிக்க அதிபர் ட்ரம்ப்.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP