மீண்டும் சிஎன்என் நிருபரை முறைத்த ட்ரம்ப் 

பிரான்ஸ் புறப்படும் முன்பு ஏப்ரில் ரயைான் என்ற மற்றொரு சி.என்.என். பெண் நிருபரிடம் அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப் மிரட்டல் விடும் தொனியில் பேசியது பரபரப்பையும் மீண்டும் சர்ச்சையையும் ஏற்படுத்தியுள்ளது.
 | 

மீண்டும் சிஎன்என் நிருபரை முறைத்த ட்ரம்ப் 

அமெரிக்காவிலிருந்து பிரான்ஸ் புறப்படும் முன்பு, ஏப்ரில் ரயைான் என்ற மற்றொரு சி.என்.என். பெண் நிருபரிடம் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் மிரட்டல் தொனியில் பேசியது பரபரப்பையும் எதிர்ப்பையும் ஏற்படுத்தியுள்ளது. 

அமெரிக்க அதிபர் டொனால்டு ட்ரம்ப்பின் குடியரசுக் கட்சிக்கு அமெரிக்காவில் சில தினங்களுக்கு முன் நடந்த இடைகாலத் தேர்தலில் பின்னடைவு ஏற்பட்டது. அதனைத் தொடர்ந்து அட்டர்னி ஜெனரல் ஜெப் செஷன்ஸ் பதவி விலகினார். 

இது குறித்து நேற்று முன் தினம் வெள்ளை மாளிகையில் ட்ரம்ப் பேட்டியளித்தார். அப்போது சி.என்.என். செய்தியாளர் ஜிம் அகோஸ்டா கேள்வி மேல் கேள்வி கேட்க, அதற்கு கோபமடைந்த ட்ரம்ப் அவரிடம் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். அப்போது, வெள்ளை மாளிகை பெண் ஊழியர் ஒருவர் வந்து, அகோஸ்டாவிடம் இருந்த மைக்கை பிடுங்க முயற்சித்தார். அப்போது, அகோஸ்டாவின் கை அந்த பெண் மீது பட்டதாகவும், அந்த பெண்ணிடம் அகோஸ்டா மோசமாக நடந்து கொண்டதாகவும் கூறி, அவரது வெள்ளை மாளிகை அனுமதியை ரத்து செய்துள்ளார், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ். 

இந்த நிலையில் இன்று காலை, அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பிரான்ஸ் புறப்பட்டார். அப்போது விமான நிலையம் செல்லும் முன்பு நிருபர்கள் அவரிடம் சில கேள்விகளை எழுப்பினர். அப்போது அட்டர்னி ஜெனரல் ராஜினாமா குறித்து அங்கிருந்து சிஎன்என் நிருபர் கேள்வி கேட்டார். உடனே நீங்கள் இது போன்ற முட்டாள்தனமான கேள்வியை அதிகம் கேட்டுவீட்டீர்கள். மீண்டும் அதையே கேட்க வேண்டாம் என மிரட்டல் தொனியில் எச்சரித்தார். அதோடு ஏப்ரில் ரயைானின் தோற்றத்தை குறிப்பிடுமாறு, ''நீங்கள் ஒருவரின் தோல்வி குறித்து பேசுகிறீர்கள். ஆனால் தோற்பது நீங்கள் தான். நான் கூறுவது என்னவென்றால், உங்களது செயல் கீழ்த்தனமாக உள்ளது. இதன் மூலம் நீங்கள் பிரபலமாவீர்கள். அல்லது பதவி உயர்வு கிடைக்கும். ஊதியம் உயர்வு தருவார்கள். ஒப்பந்தம் நீளும். அந்த சி.என்.என் பத்திரிகையாளரை தான்'' என்று ஆவேசமாக கூறினார்.

அவரது இந்த பேச்சு மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. ஏப்ரில் ரயைான் ஒரு கறுப்பினத்தவர் என்பதால், இந்த விவகாரம் இன ரீதியிலாகவும் ட்ரம்புக்கு எதிராக விமர்சனத்தை பெற்று வருகிறது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP