இந்தியாவுக்கு நவீன ஹெலிகாப்டர்களை விற்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்

இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.
 | 

இந்தியாவுக்கு நவீன ஹெலிகாப்டர்களை விற்க ட்ரம்ப் நிர்வாகம் ஒப்புதல்

இந்தியாவுக்கு 6 அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை விற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தலைமையிலான நிர்வாகம் ஒப்புதல் அளித்திருக்கிறது.

ஏஎச்-64இ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்களை அமெரிக்கா உற்பத்தி செய்கிறது. மிகவும் அதிநவீனமான இவை, தாக்குதலில் மிகச் சிறப்பாக செயல்பட வல்லது.  அப்பாச்சி ஹெலிகாப்டர்களை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க அதிபர் ட்ரம்ப்பின் நிர்வாகம் நேற்று முன்தினம் ஒப்புதல் அளித்திருக்கிறது. இதற்கான ஒப்புதலுக்காக, அமெரிக்க செனட் சபைக்கும் குறிப்புகள் அனுப்பப்பட்டுள்ளது. ஒப்புதல் உறுதி பெற செனட் சபையின் ஆதரவும் தேவை. 

இது குறித்து பென்டகன் வெளியிட்ட அறிக்கையில், "அப்பாச்சி ஹெலிகாப்டர்களை விற்பதன் மூலம், இந்திய பாதுகாப்புத் துறை மேலும் வலுப்பெறும். பிராந்திய அளவில் உருவாகும் அச்சுறுத்தலை சமாளிக்கவும் இந்த ஹெலிகாப்டர்களைப் பயன்படுத்த முடியும்" என்று தெரிவித்துள்ளது.

இதன் விலை 930 மில்லியன் அமெரிக்க டாலர். (இந்திய மதிப்பில் இது 6,231 கோடி ரூபாய்).

இதுதவிர வானில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்குவது மற்றும் தரையில் இருந்து தரையில் உள்ள இலக்கை தாக்கும் ‘ஹெல்பையர்’ ரக ஏவுகணை மற்றும் தரையில் இருந்து வான் இலக்கைத் தாக்கி அழிக்கும் ‘ஸ்டின்ஜெர்’ ரக ஏவுகணைகளை இந்தியாவுக்கு விற்க அமெரிக்க நிர்வாகம் ஒப்புதல் அளித்துள்ளது.

மேலும், இரவிலும் எதிரில் உள்ளவற்றை கண்டறிய உதவக்கூடிய சென்சார்கள், நேவிகேஷன் சிஸ்டம், மற்றும் ரேடார்களை இந்தியாவுக்கு வழங்கவும் இந்த ஒப்பந்தத்தில் சேர்க்கப்பட்டுள்ளன. 

இதற்கான ஒப்பந்தத்தை இறுதி செய்வது குறித்து அடுத்த மாதம் பேச்சுவார்த்தை நடக்க உள்ளது. இந்த பேச்சுவார்த்தையில் வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ், பாதுகாப்புத் துறை அமைச்சர் நிர்மலா சீதாராமன், அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் போம்பியோ, பாதுகாப்பு அமைச்சர் ஜேம்ஸ் மேட்டிஸ் ஆகியோர் பங்கேற்க கூடும் என்று பாதுகாப்புத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

ஏஎச்-64இ அப்பாச்சி ரக ஹெலிகாப்டர்கள் அமெரிக்கா ராணுவத்திலும் சர்வதேச பாதுகாப்புப்படைகளிலும் பயன்பாட்டில் உள்ளன.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP