150 உடல்களுடன் சுற்றிய ட்ரக்: மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்!

மெக்சிகோவில் ஒரு வாரமாக நகரம் முழுவதும் சுற்றி வந்த நாற்றம் வீசும் லாரியால் மக்கள் பெரும் பீதியடைந்தனர். பின்னர் அதில் 150 இறந்த உடல்கள் இருந்ததை அறிந்து அதிர்ந்து போயினர்.
 | 

150 உடல்களுடன் சுற்றிய ட்ரக்: மெக்சிகோவில் அதிர்ச்சி சம்பவம்!

மெக்சிகோவில் 150 பிணங்களுடன் சுற்றிய மர்ம லாரி பெரும் அதிர்ச்சியையும் பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ளது.  

மத்திய அமெரிக்க நாடுகளுக்கு நடுவே இருக்கிறது மெக்சிகோ. இங்கு போதைப் பொருள் கடத்தல், வேலையில்லா திண்டாட்டம், குற்றச் சம்பவங்கள் என அதிகளவில் பிரச்னைகள் உள்ளன. இதனால் வாழ்வாதாரம் இல்லாத மக்கள் அமெரிக்காவுக்கு சட்டவிரோதமாக குடியேறுகின்றனர். இதனால் இரு நாடுகளின் எல்லையிலும் பிரச்னை நிலவி சுவர் எழுப்பப்பட்டு வருகிறது. 

இந்த நிலையில் மெக்சிகோவின் கோடலஜாரா என்ற பகுதியில் தெரு தெருவாக சுற்றிய லாரி மக்களை பீதிக்கு உள்ளாக்கியது. துர் நாற்றம் வீசிய அந்த லாரியால் மக்கள் அவதிக்குள்ளாகினர். இதனால் அந்த லாரியை எங்காவது நிறுத்திவைக்கும்படி கூறியுள்ளனர். லாரி ஓட்டுநரும் அந்த லாரியை ஒரு தெரு ஓரம் நிறுத்தியுள்ளார். லாரியில் இருந்து வெளிப்பட்ட துர்நாற்றம் காரணமாக லாரியை அங்கிருந்து நகர்த்தும்படி அந்த பகுதி மக்கள் சண்டைபோட்டுள்ளனர். இப்படி, லாரி ஒவ்வொரு தெருவாக நிறுத்தப்பட்டுள்ளது. ஆனால், லாரியில் என்ன உள்ளது என்று கேட்க யாருக்கும் தைரியம் வரவில்லை.

இந்த நிலையில் அந்த லாரியில் இருந்து அதிக நாற்றம் அடிக்கவே, போலீசில் புகார் அளிக்கப்பட்டு இருக்கிறது. அதன் பின், போலீஸ் வந்து விசாரணை செய்தத்தில் பகீர் தகவல் வெளியானது. அந்த லாரியில் இறந்த 150 உடல்கள் இருந்துள்ளது. அவை எல்லாமே ஒரு மாதத்திற்கு முன் இறந்தவர்களின் உடல்கள். அடையாளம் காணப்படாத நபர்களின் உடல்களை புதைக்க இடம் இல்லாததால் லாரியில் வைத்தபடியே ஒரு வாரமாக அப்படியே சுற்றி வந்துள்ளதும் தெரியவந்தது. 

இதைத் தொடர்ந்து இந்த வாரத்தில் அந்த பகுதியில் உடல்களைப் புதைக்க இடம் ஏற்பாடு செய்யப்படும் என நகர நிர்வாகம் உறுதி அளித்துள்ளது. அதுவரை அந்த லாரி இதே போல சுற்றிவர வேண்டியது தான் போல. 

Newstm. in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP