நடுவானில் மோதிக்கொண்ட பயிற்சி விமானங்கள்... இந்தியப்பெண் உள்பட 3 பேர் பலி!

அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் மோதிக் கொண்டதில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர்.
 | 

நடுவானில் மோதிக்கொண்ட பயிற்சி விமானங்கள்... இந்தியப்பெண் உள்பட 3 பேர் பலி!

அமெரிக்காவில் பயிற்சி விமானங்கள் மோதிக் கொண்டதில் இந்தியாவைச் சேர்ந்த இளம்பெண் உள்பட மூன்று பேர் உயிரிழந்தனர். 

அமெரிக்காவின் டீன் இன்டர்நேஷனல் என்ற தனியார் பயிற்சி பள்ளிக்குச் சொந்தமான இரண்டு சிறிய விமானங்கள் நேற்று முன்தினம் (ஜூலை17) பயிற்சியில் ஈடுபட்டன. ஃபுளோரிடா மாகாணத்தில் பயிற்சியில் ஈடுபட்டு கொண்டிருந்த சமயத்தில் நடுவானில் இரண்டு விமானங்களும் எதிரெதிரே மோதிக்கொண்டன. இதில் விமானத்தில் பயணித்த 3 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.

இவர்களில் ஒருவர் இந்தியாவைச் சேர்ந்த 19 வயது பெண் நிஷா செஜ்வால். மற்ற இருவர் ஜார்ஜ் சான்செஸ் (22), ரால்ப் கினைட் (72) ஆகியோர் ஆவர். மேலும், விமானத்தில் பயணித்த 4வது நபரை தேடும் பணி தொடர்ந்து வருகிறது. அவருடன் உயிருடன் இருக்க வாய்ப்பில்லை என்றே கூறப்படுகிறது. விமானம் மோதிக்கொண்டதை அங்கிருந்த ஒருவர் செல்போனில் படம் பிடித்துள்ளார். மியாமி  டீன் இன்டர்நேஷனல் பள்ளியில் இதுபோன்று அடிக்கடி விமான விபத்துக்கள் நடைபெறும் எனவும் கடந்த 10 ஆண்டுகளில் 25க்கும் மேலான விமான விபத்துக்கள் நடைபெற்றுள்ளன என அந்நகர மேயர் தெரிவித்துள்ளார்..

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP