ரயில்கள் மோதி விபத்து; 2 பேர் பலி

ரயில்கள் மோதி விபத்து; 2 பேர் பலி
 | 

ரயில்கள் மோதி விபத்து; 2 பேர் பலி


அமெரிக்காவின் நியூயார்க் நகரில் இருந்து மியாமி நகருக்கு சென்று கொண்டிருந்த ஆம்டிராக் ரயில் ஒன்று, சரக்கு ரயிலின் மீது இன்று மோதியது. இந்த விபத்தில் 2 பேர் பலியானார்கள், சுமார் 70 பேர் காயமடைந்ததனர்.

விபத்தில், எஞ்சின் பெட்டியும், வேறு சில பெட்டிகளும் தடம் புரண்டன. சுமார் 19,000 லிட்டர் டீசல் அந்த பகுதியில் கொட்டியுள்ளதால், பேரிடர் மீட்புப் படையினர் அங்கு விரைந்துள்ளனர்.

பயணிகள் சென்ற ஆம்டிராக் ரயிலில் 139 பயணிகளும் 8 பணியாளர்களும் சென்றதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இறந்தவர்கள் குறித்த விவரங்கள் இன்னும் வெளியாகவில்லை.

சில தினங்களுக்கு முன், மற்றொரு ஆம்டிராக் ரயில் தடம்புரண்டத்தில் 2 பேர் காயமடைந்தனர். விபத்துக்குள்ளான அந்த ரயிலில், அமெரிக்காவின் ஆளும்கட்சியான குடியரசு கட்சியை சேர்ந்த நூற்றுக்கணக்கான நாடாளுமன்ற உறுப்பினர்கள் சென்றது குறிப்பிடத்தக்கது. ஒரு கட்சி விழாவுக்கு அவர்க சென்றுகொண்டிருந்த போது இந்த விபத்து ஏற்பட்டது.

அமெரிக்க அரசின் கீழ் இயங்கி அவரும் ஆம்டிராக் ரயில், கடந்த சில மாதங்களில் பல்வேறு விபத்துக்களை சந்தித்து வருகிறது. பல ஆண்டுகளாக விமர்சனத்துக்குள்ளாகி வரும் ஆம்டிராக் ரயில்கள், மாதம் இருமுறை விபத்துக்குள்ளாவதாக அமெரிக்க அரசு அறிக்கை வெளியிட்டுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP