அமெரிக்காவுடனான வணிகப் போர்: சோளத்தின் மீது 179% வரி விதித்தது சீனா

கடந்த சில மாதங்களாக அமெரிக்காவுக்கும் சீனாவுக்கும் இடையே நடந்து வரும் வணிகப் போரின் அடுத்த கட்டமாக, அமெரிக்காவில் இருந்து இறக்குமதியாகும் சோளத்தின் மீது, 179% கூடுதல் வரி விதித்துள்ளது சீனா.
 | 

தரம் குறைந்த எஃகு பொருட்களை அமெரிக்காவில் சீனா ஒட்டுமொத்தமாக குவித்து வருவதாக அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். இதுகுறித்து நடவடிக்கை எடுக்கப் போவதாக நீண்ட காலமாக எச்சரித்து வந்த அவர், இரண்டு மாதங்களுக்கு முன், முதற்கட்ட நடவடிக்கைகளை எடுத்தார். 

தனது பொருளாதார ஆலோசகர்களின் பேச்சையும் மீறி, சீனாவில் இருந்து இறக்குமதியாகும் எஃகு மற்றும் அலுமினிய பொருட்கள் மீது புதிய வரி விதித்தார். ட்ரம்ப் இந்த நடவடிக்கை எடுத்தால், பதிலுக்கு சீனாவும், அமெரிக்க பொருட்கள் மீது வரி விதிக்கும் என்றும் இதனால் இரு நாடுகளுக்கும் இடையே வணிகப் போர் உண்டாகும் என்றும் எச்சரிக்கப்பட்டது. ஆனால், அவர் பின்வாங்கவில்லை. 

இதைத் தொடர்ந்து, அமெரிக்க பொருட்கள் மீது சீனா வரி விதித்து பதிலடி கொடுத்தது. பழங்கள், பன்றி இறைச்சி, வைன், உள்ளிட்ட பொருட்கள் மீது சீனா வரி விதித்தது. அடுத்த கட்டமாக, அமெரிக்காவின் முக்கிய ஏற்றுமதி பொருளான சோளத்தின் மீது 179% வரி விதித்துள்ளது சீனா. கடந்த வருடம் மட்டும், சுமார் 6300 கோடி ரூபாய் (957 மில்லியன் டாலர்) அளவில் அமெரிக்க சோளம் சீனாவில் இறக்குமதி செய்யப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது. 

இதனால், அமெரிக்காவில் இருந்து சீனாவுக்கு வரவேண்டிய பல சரக்குகள் ரத்து செய்யப்படலாம் என கூறப்படுகிறது. 

முன்னதாக "இதுபோன்ற வணிகப் போர்களில் வெல்வது ரொம்ப ஈஸி," என ட்ரம்ப் கூறியிருந்தார். ட்ரம்ப் முதற்கட்ட நடவடிக்கை எடுத்தவுடன், அவரது மூத்த பொருளாதார ஆலோசகர் தனது பதவியை ராஜினாமா செய்தது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP