வர்த்தகப் போர் துவங்கியது! - சர்ச்சைக்குரிய வரிகளை சட்டமாக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று, தான் முன்மொழிந்த சர்ச்சைக்குரிய இறக்குமதி வரிகளை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.
 | 

வர்த்தகப் போர் துவங்கியது! - சர்ச்சைக்குரிய வரிகளை சட்டமாக்கினார் டிரம்ப்

வர்த்தகப் போர் துவங்கியது! - சர்ச்சைக்குரிய வரிகளை சட்டமாக்கினார் டிரம்ப்

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் இன்று, தான் முன்மொழிந்த சர்ச்சைக்குரிய இறக்குமதி வரிகளை நடைமுறைக்கு கொண்டுவந்தார்.

அமெரிக்க பொருட்களுக்கு மற்ற நாடுகள் அதிக வரி விதித்து, தங்களை ஏமாற்றி வருவதாக டிரம்ப் தொடர்ந்து கூறி வருகிறார். மலிவான எஃகு பொருட்களை அமெரிக்காவில் சீனா தொடர்ந்து இறக்குமதி செய்து வருவதாகவும், அதனால், அமெரிக்க  எஃகு தொழில் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளதாகவும் டிரம்ப் குற்றம் சாட்டினார்.

இதற்கு பதிலடி கொடுக்குமாறு, மற்ற நாடுகளில் இருந்து இறக்குமதியாகும் பொருட்கள் மீது புதிய வரி விதிக்கப்போவதாக சில தினங்களுக்கு முன் திடீரென அவர் தெரிவித்தார். எந்தவித ஆலோசனையும் இல்லாமல் இந்த முடிவை அவர் எடுத்ததால், பலர் அதிர்ச்சியடைந்தனர். அவரது நெருங்கிய ஆலோசகர்கள் மற்றும் கட்சியின் மூத்த எம்.பி.க்கள் இந்த நடவடிக்கை ஆபத்தானது என எச்சரித்தனர்.

இதனால், மற்ற நாடுகள் அமெரிக்க பொருட்கள் மீது மேலும் வரி விதிக்கக்கூடும் என அவர்கள் கூறியதோடு, அமெரிக்கா மற்றும் நட்பு நாடுகளுக்கு இடையே, வர்த்தகப் போர் உண்டாகும் எனவும் எச்சரித்தனர். ஆனால், "டிரம்ப் வர்த்தகப் போர் நல்லது தான். அதில் வெல்வது ரொம்ப ஈஸி" என கூறினார்.

கனடா உள்ளிட்ட நாடுகள் இதற்கு கடும் கண்டனம் தெரிவித்த நிலையில், ஐரோப்பிய கமிஷன் தலைவர் ஜான் கிளாட் ஜங்கர் "இது ஒரு முட்டாள்தனமான முடிவு. இதனால் நாங்களும் முட்டாள்தனமாக நடந்துகொள்ள வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது" என்றார். ஐரோப்பிய யூனியன் இதற்கு பதிலடியாக பிரபல அமெரிக்க பொருட்களான ஹார்லி டேவிட்ஸன், லீவைஸ் ஜீன்ஸ் உள்ளிட்டவை மீது அதிக வரி விதிக்கவுள்ளதாக எச்சரித்தது. 

இரு தினங்களுக்கு முன், டிரம்ப்பின் மூத்த பொருளாதார ஆலோசகர் கேரி கோஹன், தனது பதவியை ராஜினாமா செய்தார். இந்த புதிய வரிகளை எதிர்த்து அவர் பேசி வந்ததாகவும், அதை டிரம்ப் கேட்காததால் ராஜினாமா செய்வதாகவும் கூறப்பட்டது.

இந்நிலையில், இன்று டிரம்ப் எஃகு இறக்குமதி மீது 25% வரியும், அலுமினியம் மீது 10% வரியும் விதிக்கும் சட்டத்தில் கையெழுத்திட்டார். இன்னும் 15 நாட்களில் இந்த வரி நடைமுறைக்கு வருகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP