மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் பல்ட்டி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார்.
 | 

மெக்சிகோவுடன் வர்த்தக ஒப்பந்தம்: ட்ரம்ப் பல்ட்டி

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப், மெக்சிகோவுடன் புதிய வர்த்தக ஒப்பந்தம் முடிவுக்கு வந்துள்ளதாக தெரிவித்துள்ளார். மெக்சிகோவுடனான பழைய வர்த்தக ஒப்பந்தம் அமெரிக்காவுக்கு பெரும்  இழப்பை ஏற்படுத்தியதாக கூறிவரும் ட்ரம்ப், இந்த புதிய ஒப்பந்தத்திற்கு ஒப்புதல் அளித்துள்ளது பல கேள்விகளை எழுப்பியுள்ளது.

முன்னாள் அதிபர் பில் கிளிண்டன், மெக்சிகோ மற்றும் கனடாவுடன் வர்த்தக ஒப்பந்த்ததை கையெழுத்திட்டார். இந்த வர்த்தக ஒப்பந்தத்திற்கு NAFTA என பெயரிடப்பட்டது. இந்த ஒப்பந்தத்தால், அமெரிக்காவில் இருந்த பல வேலைவாய்ப்புகள் மெக்சிகோவுக்கு சென்றதாக ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வந்தார். அமெரிக்க பொருளாதாரத்தை இந்த ஒப்பந்தம் பாதிப்பதாக கூறி வந்தார். NAFTA ஒப்பந்தத்தை ட்ரம்ப் அரசு ரத்து செய்ய நடவடிக்கை எடுத்து வருகிறது. ஆனால், மெக்சிகோ எல்லையில் பெரிய சுவர் கட்டும் திட்டத்தை ட்ரம்ப் தொடர்ந்து வலியுறுத்தி வருவதால், மெக்சிகோ அரசாங்கம் கோபத்தில் உள்ளது. 

இந்நிலையில், மெக்சிகோவுடனான புதிய வர்த்தக ஒப்பந்தத்திற்கான பேச்சுவார்த்தைகள் சுமூகமாக முடிந்துள்ளதாக தெரிய வந்துள்ளது. இதை ட்ரம்ப் நேற்று அறிவித்தார். இந்த புதிய ஒப்பந்தம் NAFTA-வை விட பலமடங்கு சிறந்தது எனவும் அவர் கூறினார். கனடாவையும் இந்த ஒப்பந்தத்தில் சேர அழைப்பு  விடுத்துள்ளதாக அமெரிக்க அரசு தெரிவித்துள்ளது. கனடாவின் ஒப்புதல் இல்லாவிட்டாலும், மெக்சிகோவுடனான ஒப்பந்தம் தொடரும் என குறிப்பிட்டுள்ளனர்.

ஆனால், மெக்சிகோ அதிபர் இதுகுறித்து பேசும்போது, புதிய NAFTA ஒப்பந்தம் எனவே குறிப்பிட்டார். பழைய ஒப்பந்தத்தை  மாற்றியமைக்கும் முயற்சி தான் இது என மெக்சிகோ தரப்பில் கூறிவரும் நிலையில், இது முற்றிலும் புதிய ஒப்பந்தம் என ட்ரம்ப் கூறி வருவது குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP