உள்ளாடைகளை அகற்ற சொன்னார்: ஜேம்ஸ் பாண்டு பட தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

பிரபல நடிகை ரோஸ்மண்ட் பைக், ஜேம்ஸ் பாண்ட் பட தாயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி மீது அதிரடியாக பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்துள்ளார்.
 | 

உள்ளாடைகளை அகற்ற சொன்னார்: ஜேம்ஸ் பாண்டு பட தயாரிப்பாளர் மீது நடிகை புகார்

பிரபல நடிகை ரோஸ்மண்ட் பைக், ஜேம்ஸ் பாண்ட் பட தாயாரிப்பாளர் பார்பரா ப்ரோக்கோலி  மீது அதிரடியாக பாலியல் அத்துமீறல் புகார் தெரிவித்துள்ளார்.

ஹாலிவுட் திரை உலகில் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் தொடர்பான பிரச்னைகள் குறித்து வெளிப்படையாக பல பிரபலங்களும் Me Too ஹேஷ்டேக் மூலம் தெரிவித்து வருகின்றனர்.  பட வாய்ப்புக்காக பாலியல் ரீதியாக பாதிக்கப்பட்ட பெண்கள் தைரியமாக தங்களுக்கு ஏற்பட்ட கொடுமைகளை வெளிப்படையாக கூறி வருகின்றனர்.  

2002ஆம் ஆண்டு வெளிவந்த ஜேம்ஸ் பாண்ட் படம் டை அனதர் டே. இதில் நடித்தவர் ரோஸ்முண்ட் பைக்.  அப்போது தனது 21 வயதில் அவர் மிராண்டா ஃப்ரோஸ்டர் என்ற கதாபாத்திரத்தில் நடித்தார். 

இந்த நிலையில் தற்போது 39 வயதாகும் ரோஸ்முண்ட் அந்த படத்தின் தயாரிப்பாளர் மீது பாலியல் புகார் கூறி உள்ளார். படத்தின் தயாரிப்பாளர் படத்தில் நடிக்கும் போது தனது உள்ளாடைகள் அகற்றப்பட வேண்டும் என கூறியதாகவும் ஆனால் அதனை தான் செய்ய மறுத்ததாக கூறியுள்ளார்.

தயாரிப்பாளர்களால் நான்  கவர்ச்சியான ஆடை அணிய வேண்டும் என்று சொன்னார், மேலும் அதையும்  "கைவிட வேண்டும்" என கூறினார். மேலும் நாள் முழுவதும் அணிய 3 துண்டு துணிகள் மட்டுமே கொடுக்கப்பட்டது என்று பகிரங்கமாக கூறியுள்ளார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP