நியாயமாகப் பார்த்தால் நோபல் பரிசு எனக்கு பல முறை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ட்ரம்ப் அதிரடி!!

"தேர்வுக் குழுவினர் நியாயமாக பணியாற்றியிருந்தால் நோபல் விருது எனக்கு பல்வேறு விஷயங்களுக்காக பல முறை வழங்கப்பட்டிருக்கும். ஆனால்அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.
 | 

நியாயமாகப் பார்த்தால் நோபல் பரிசு எனக்கு பல முறை வழங்கப்பட்டிருக்க வேண்டும் - ட்ரம்ப் அதிரடி!!

" தேர்வுக்குழுவினர் நேர்மையாக நியாயமாக செயல்பட்டிருந்தால் எனக்கு பல்வேறு விஷயங்களுக்காக பல முறை நோபல் விருது வழங்கப்பட்டிருக்கும். ஆனால்அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள், ஆனால் பாரக் ஓபாமாவிற்கு வழங்கியுள்ளனர்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறியுள்ளார்.

"ஹௌடி மோடி" நிகழ்ச்சியை தொடர்ந்து, பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான் மற்றும் அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் இருவரும் பத்திரிக்கையாளர்களைச் சந்தித்தனர். அப்போது பத்திரிக்கையாளர்களிடம் பேசிய ட்ரம்ப், "2009 ஆம் ஆண்டு,  அதிபராக பதவியேற்ற சில மாதங்களிலேயே பாரக் ஒபாமா விற்கு, சர்வதேச நாடுகளுடன் நல்ல உறவில் இருந்ததற்காகவும், மக்களிடம் ஒற்றுமையை வளர்த்தற்காகவும் அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. 

" நோபல் பரிசு நியாயமான முறையில் வழங்கினால், எனக்கு பல்வேறு விஷயங்களுக்காக பல முறை விருது வழங்கப்பட்டிருக்கும். ஆனால்அவர்கள் அப்படி செய்ய மாட்டார்கள். ஓபாமா மாதிரியான நபர்களுக்கே நோபல் விருதினை வழங்குவார்கள்" என அமெரிக்க அதிபர் ட்ரம்ப் நோபல் தேர்வுக் கமிட்டியின் செயல்பாடுகளில் உள்ள குறைகளை சுட்டிக் காட்டி அவர்களை கேளிக்கு உள்ளாக்கியுள்ளார்.

மேலும், காஷ்மீர் பிரச்சனை குறித்து பாகிஸ்தான் பிரதமர் இம்ரான் கான், ட்ரம்பிடம் குற்றம் சாட்டியதற்கு பதிலளிக்கும் வகையில், "காஷ்மீர் பிரச்னையில் மத்தியஸ்தம் செய்ய நான் தயாராகத் தான் உள்ளேன்.

ஆனால் நீங்கள் மட்டும்தான் அதுகுறித்து என்னிடம் பேசுகிறீர்கள். அதை இந்தியா என்னிடம் கோராத நிலையில் உங்களுக்கு நான் எவ்வாறு உதவ இயலும். நீங்கள் மோடியிடமே நேரடியாகப் பேசி இந்த பிரச்னையை தீர்த்துக்கொள்வது சிறப்பாக இருக்கும்" என தெரிவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP