`டைம்ஸ் அப்` - பாலியல் குற்றங்களை தடுக்குமா?

`டைம்ஸ் அப்` - பாலியல் குற்றங்களை தடுக்குமா?
 | 

`டைம்ஸ் அப்` - பாலியல் குற்றங்களை தடுக்குமா?


ஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் உள்ள பெண்களுக்கு எதிராக நடக்கும் வன்முறைகளை தடுக்க `டைம்ஸ் அப்` என்ற திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது.

சமீபத்தில் அமெரிக்க திரைப்பட தயாரிப்பாளர் ஹார்வி வைன்ஸ்டைன், தனக்கு கீழ் வேலை செய்யும் நடிகைகளை பாலியல் ரீதியாக துன்புறுத்தியதாக குற்றச்சாட்டுக்கள் முன்வைக்கப்பட்டது. ஆனால் இந்தக் குற்றச்சாட்டுக்களை அவர் ஏற்கவில்லை.

இந்நிலையில், ஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் பெண்கள் எதிர்கொள்ளும் பாலியல் துன்புறுத்தல்களுக்கு எதிராக, ஹாலிவுட்டை சேர்ந்த 300க்கும் மேற்பட்ட நடிகர்கள், எழுத்தாளர்கள் மற்றும் இயக்குநர்கள் இணைந்து 'டைம்ஸ் அப்' என்ற திட்டத்தை வடிவமைத்துள்ளனர்.

இந்த திட்டத்திற்கு, ஹாலிவுட்டின் பிரபல நடிகைகளான, நாட்டலி போர்ட்மேன், ரீஸ் விதர்ஸ்பூன், எம்மா ஸ்டோன் உள்ளிட்ட பலர் ஆதரவு தெரிவித்துள்ளனர். இந்த திட்டத்திற்கான 15 மில்லியன் டாலர் பணத்தில், 13 மில்லியன் டாலர்கள் இது வரையில் சேர்க்கப்பட்டுள்ளதாகவும் இந்த பணம், பாலியல் துன்புறுத்தல்களுக்கு ஆளாகும் பெண், ஆண் ஆகியோரின் வழக்கு செலவுகளுக்கு பயன்படுத்தப்படும் என்றும் கூறப்பட்டுள்ளது.

ஹாலிவுட், மற்றும் பிற துறைகளில் பெண்கள் பாலியல் ரீதியில் பாதிக்கப்படும் போது, அந்த குற்றங்களில் ஈடுபட்டவர்கள் தண்டிக்கப்படாத காரணத்தினால் இத்தகைய பாலியல் துன்புறுத்தல்கள் தொடர்வதாக கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP