ட்ரம்ப்பை மீண்டும் அட்டைப்படத்தில் விமர்சித்த 'டைம்' இதழ் 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஓவல் மாளிகையில் மூழ்கி மிதப்பதாக 'டைம்' பிரபல அமெரிக்க இதழ் மீண்டும் அட்டைப் படத்தில் விமர்சித்துள்ளது.
 | 

ட்ரம்ப்பை மீண்டும் அட்டைப்படத்தில் விமர்சித்த 'டைம்' இதழ் 

அமெரிக்க அதிபர் ட்ரம்ப் தனது ஓவல் மாளிகையில் மூழ்கி மிதப்பதாக பிரபல அமெரிக்க இதழ் 'டைம்' மீண்டும் அட்டைப்படத்தில் விமர்சித்துள்ளது. 

அமெரிக்க அதிபர் ட்ரம்புக்கும் ஊடகங்களுக்கும் ஏழாம் பொருத்தம்தான். ஒருவரை ஒருவர் மாற்றி மாற்றி விமர்சித்துக்கொள்கின்றன. சி.என்.என், டைம்ஸ் உள்ளிட்ட அமெரிக்காவில் வெளியாகும் பிரபல ஊடகங்களை பொய் செய்தி வெளியிடும் ஊடகங்கள் என்று ட்ரம்ப் தொடர்ந்து விமர்சித்து வருகிறார். இந்தநிலையில், அமெரிக்க அதிபர் மாளிகையில் ட்ரம்ப் மூழ்கி இருப்பது போல அமெரிக்காவின் புகழ் பெற்ற இதழான 'டைம்' அட்டைப் படம் வெளியிட்டுள்ளது.  அவரது நாற்காலிக்கு ஆபத்து இருப்பதாக சுட்டிக்காட்டும் வகையில் அந்தப் படம் அமைந்துள்ளது. 

இது போல அட்டைப்படத்தில் ட்ரம்ப் விமர்சிக்கப்படுவது முதல்முறை அல்ல என்பது குறிப்பிடத்தக்கது. 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் களம் இறங்கியது முதல் டொனால்டு ட்ரம்ப் பல்வேறு சிக்கல்களில் தொடர்ந்து மாட்டி வருகிறார். அவர் தேர்தலில் வெற்றி பெற்று அதிபர் ஆயினும் இந்த விவகாரம் தொடர்ந்தே வந்தது. நடிகைகள் ஸ்ட்ரோமி டேனியல்ஸ், கெரன் மெக்டக்கால் ஆகியோர் அவர் மீது பாலியல் புகார் தெரிவித்தனர்.

இந்த இரு நடிகைகளும் ட்ரம்ப்புக்கு எதிராக பேசாமல் இருக்க ட்ரம்ப்பின் அப்போதைய வழக்கறிஞர் மைக்கேல் கோஹன் பெரும் தொகையை  கொடுத்ததாகப் புகார் எழுந்தது. இதுதொடர்பான வழக்கு நியூயார்க் நீதிமன்றத்தில் நடைபெற்று வருகிறது.

இந்த வழக்கின் மீதான விசாரணையில் கோஹன் தன் மீதான குற்றச்சாட்டை ஒப்புக்கொண்டார். மேலும் ட்ரம்பின் அறிவுறுத்தலின் பேரில் அவ்வாறு செய்ததாக கோஹன் வாக்குமூலம் அளித்துள்ளார். இந்த விவகாரம் அதிபர் ட்ரம்ப்புக்கு கடுமையான நெருக்கடியை ஏற்படுத்தியுள்ளது. 

இதனால் ட்ரம்ப் பதவி விலக வேண்டும் என்று ஜனநாயகக் கட்சி உறுப்பினர்கள் உள்ளிட்ட பலர் வலியுறுத்தி வருகின்றனர்.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP