ட்ரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திட்டங்களை எதிர்த்து இன்று ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர்.
 | 

ட்ரம்ப்புக்கு எதிராக ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம்!

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பின் சர்ச்சைக்குரிய குடியுரிமை திட்டங்களை எதிர்த்து இன்று ஆயிரக்கணக்கானோர் நாடு முழுவதும் போராட்டம் நடத்தினர். 

மற்ற நாடுகளில் இருந்து சட்டவிரோதமாக அமெரிக்காவுக்குள் நுழைய முயல்பவர்கள் மீது ட்ரம்ப் அரசு கடும் நடவடிக்கை எடுத்து வருகிறது. குடியேற்றத்தை குறைப்பதை தனது கொள்கையாக கொண்டுள்ள அவர், முக்கியமாக அண்டை நாடான மெக்சிகோவில் இருந்து அமெரிக்காவுக்குள் சட்டவிரோதமாக நுழைந்து, வாழ்ந்து வருபவர்கள் மீது கடும் நடவடிக்கை எடுத்து வந்தார். சமீபத்தில், அனுமதியில்லாமல் மெக்சிகோ எல்லையை கடந்து வரும் அந்நாட்டு மக்கள், குழந்தையோடு வந்தால், அவர்களிடம் இருந்து குழந்தைகளை பிரித்து தனி காப்பகத்தில் வைக்க ட்ரம்ப் அரசு முடிவெடுத்தது. இந்த நடவடிக்கை சரியாக திட்டமிடப்படாததால், சுமார் 2000 குழந்தைகள் தங்களது பெற்றோர்களிடம் இருந்து பிரிக்கப்பட்டு, பின்னர் மாயமானார்கள். அவர்கள் எந்த காப்பகத்தில் உள்ளார்கள், அவர்களின் பெற்றோர்கள் யார் என அதிகரிகளுக்கே சரியாக தெரியவில்லை. 

மேலும், நூற்றுக்கணக்கான சிறிய குழந்தைகளை, சிறை போல அடைத்து வைத்துள்ளது பெரிய அளவில் சர்ச்சையை கிளப்பியது. இதற்கு கடந்த சில வாரங்களாக பொதுமக்களிடேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. 

இந்நிலையில்,நூற்றுக்கணக்கான அமெரிக்கர்கள் கடும் வெயிலின் நடுவே வெள்ளை மாளிகையின் வெளியே நின்று ட்ரம்ப் அரசுக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர் இதேபோல, நாட்டின் பல்வேறு நகரங்களில் போராட்டங்கள் நடத்தப்பட்டன. இதில் ஆயிரக்கணக்கானோர் கலந்து கொண்டு, ட்ரம்ப் அரசின் நடவடிக்கைகளுக்கு எதிர்ப்பு தெரிவித்தனர். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP