ஜமால் கஷோகிக்கு இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருது- டைமஸ் பத்திரிகை

பிரபல டைம்ஸ் பத்திரிக்கை வழங்கும் இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருதை சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி உட்பட ஒடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது.
 | 

ஜமால் கஷோகிக்கு இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருது- டைமஸ் பத்திரிகை

பிரபல டைம்ஸ் பத்திரிக்கை வழங்கும் இந்த ஆண்டின் பிரபல மனிதர் விருதை சமீபத்தில் கொலை செய்யப்பட்ட சவூதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகி உட்பட ஒடுக்கப்பட்ட பத்திரிக்கையாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ளது. 

ஒவ்வொரு ஆண்டும் பிரபல டைம்ஸ் பத்திரிகை தனது அட்டைப் படத்தில் அந்தந்த ஆண்டில் அதிக தாக்கத்தை ஏற்படுத்தியவர்களை தேர்ந்தெடுத்து, அவர்களின் புகைப்படத்தை தனது அட்டையில் வெளியிடும். 2016ம் ஆண்டு அதிபர் தேர்தலில் வெற்றி பெற்ற டொனால்ட் ட்ரம்ப் படம் இடம் பெற்றது. கடந்த ஆண்டு உலகம் முழுக்க மீடூ ஹேஷ்டேக் மூலம் தங்களுக்கு நடந்த பாலியல் வன்கொடுமை மற்றும் தொல்லை சம்பவங்களை தைரியமாக வெளியே சொல்லி உலகம் முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்திய பெண்களுக்கு இந்த மரிடதது வழங்கப்பட்டது.

இந்த ஆண்டு சவுதி  அரசுக்கு எதிராக எழுதிய அந்நாட்டு பத்திரிகையாளர் ஜமால் கஷோகி, கூலிபடையால், சவுதி தூதரகத்தில் வைத்து கொலை செய்யப்பட்டார். அவர் சவுதி அரசின் உத்தரவின் பேரிலேயே கொலை செய்யப்பட்டதாக நம்பப்படுகிறது. 
இந்த ஆண்டிற்கான மனிதராக ஜமால் கஷோகி தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளார். அவருடன் சேர்த்து இந்த விருதை இடம்பெற்றுள்ளார் அவர் உட்பட பல்வேறு பத்திரிகையாளர்கள் இந்த இடம் பெற்றுள்ளனர் பிலிப்பைன்ஸ் நாட்டை சேர்ந்த பத்திரிகையாளர் மரியா ரெஸ்ஸா, மியான்மரில் சிறை வைக்கப்பட்டுள்ள ராய்ட்டர்ஸ் நிறுவன பத்திரிகையாளர்கள் வா லோன், கியா சூ ஊ, அமெரிக்காவின் மேரிலாண்டில் கடந்த ஜூன் மாதம் சுட்டுக்கொல்லப்பட்ட பத்திரிகையாளர்கள் ஆகியோருக்கும் இந்த மரியாதை வழங்கப்பட்டுள்ளது.
 1927ம் ஆண்டு முதல் டைம்ஸ் பத்திரிகை இந்த ஆண்டுக்கான சிறந்த மனிதர் பட்டத்தை வழங்கி அவர்களை தனது பத்திரிக்கையின் அட்டைப்படத்தில் காட்டுகிறது. இறந்த ஒருவரை தேர்ந்தெடுத்துள்ளது இதுவே முதல் முறை.
முதலிடத்தை பத்திரிகையாளர்கள் பிடித்த நிலையில், இரண்டாவது இடத்தில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் உள்ளார். மூன்றாவது இடத்தில் அதிபர் ட்ரம்ப் மீது விசாரணை நடத்தி வரும் சிறப்பு கமிஷன் தலைவர் ராபர்ட் முல்லர் இடம்பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP