பேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்படுகிறது கேம்பிரிட்ஜ் அனலிடிகா!

பேஸ்புக்கில் இருந்து தனிநபர் தகவல்களை திருடிய விவகாரத்தில் சிக்கிய கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்படுவதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.
 | 

பேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்படுகிறது கேம்பிரிட்ஜ் அனலிடிகா!

பேஸ்புக் தகவல் திருட்டு: மூடப்படுகிறது கேம்பிரிட்ஜ் அனலிடிகா! 

கடந்த 2016ம் ஆண்டு நடந்த அமெரிக்க அதிபர் தேர்தலில் அந்நாட்டை சேர்ந்த 8 கோடிக்கும் மேலான பேஸ்புக் பயனாளர்களின் தனிப்பட்ட தகவல்கள் தவறாக பயன்படுத்தப்பட்டதாக சர்ச்சை எழுந்தது. தேர்தல் முடிவையே இது மாற்றியுள்ளது என்றும் கூறப்படுகிறது.

இதில் டொனால்ட் ட்ரம்ப் ஆதரவாளர்களுக்காக பிரிட்டனை சேர்ந்த கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் பேஸ்புக் பயன்படுத்துபவர்கள் பற்றி தகவல்களைத் திருடியுள்ளது என்று அந்நிறுவனத்தின் முன்னாள் ஊழியர் ஒருவர் அம்பலப்படுத்தினார்.

இந்த விவகாரம் பூதாகரமாக வெடித்தது. இதற்காக பேஸ்புக் நிறுவனம் பகிரங்க மன்னிப்பு கேட்டது. இந்நிலையில் இந்த விவகாரத்தில் குற்றம் சாட்டப்பட்டுள்ள பிரிட்டன் மற்றும் அமெரிக்காவில் செயல்பட்டு வந்த 2 கேம்பிரிட்ஜ் அனலிடிகா நிறுவனம் மூடப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது. 

பேஸ்புக்கில் இருந்து தகவல்கள் திருடிய வழக்கில் உரிய கட்டணம் செலுத்த முடியாததாலும், அந்நிறுவனத்தில் வாடிக்கையாளர்கள் குறைந்துவிட்டதாலும் கேம்பிரிட்ஜ் அனலிடிகா திவாலாகி உள்ளது. இதனையடுத்து போதிய நிதி இன்றி நிறுவனத்தை நடத்த முடியாது என்பதால் அந்நிறுவனம் மூடப்படுவதாக கூறப்படுகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP