உலகம் அழிவை நோக்கி செல்கிறது..விஞ்ஞானிகள் எச்சரிக்கை..

உலகம் அழிவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
 | 

உலகம் அழிவை நோக்கி செல்கிறது..விஞ்ஞானிகள் எச்சரிக்கை..


உலகம் அழிவை நோக்கி பயணித்துக்கொண்டிருப்பதாக அறிவியலாளர்கள் எச்சரித்துள்ளனர். 

அமெரிக்காவின் சிகாகோ பல்கலைக் கழகத்தில் ஊழிக்கடிகாரம் (Doomsday Clock) பராமரிக்கப்பட்டு வருகிறது. உலகத்தில் சுற்றுசூழல் பிரச்னைகள், காலநிலை மாற்றங்கள் மற்றும் நாடுகளுக்கு இடையே காணப்படும் மோதல்கள் அடிப்படையில் விஞ்ஞானிகள்  ஊழிக்கடிகாரத்தில் நேரத்தை மாற்றியமைப்பர்.  இதற்கு முன்னதாக 7 நிமிடங்கள் இருப்பதாக காட்டப்பட்ட கடிகாரத்தில் தற்போது ஊழிக்காலத்திற்கு 2 நிமிடங்கள் மட்டுமே இருப்பதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

உலகம் அழிவை நோக்கி செல்கிறது என்பதை விஞ்ஞானிகள் இதன்மூலமாக எச்சரித்துள்ளனர். அமெரிக்கா-வடகொரியா இடையே அணுஆயுதப் போர் தொடங்குவதற்கான ஒரு அறிகுறியாகவும் இது பார்க்கப்படுகிறது. இதனால் உலகம் அழிவதற்கான காலம் வெகு தொலைவில் இல்லை என விஞ்ஞானிகள் தொிவித்துள்ளதாக பேசப்படுகிறது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP