சி.என்.என் நிருபரை தடை செய்ய வெள்ளை மாளிகை நடத்திய நாடகம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்த சி.என்.என் நிருபருக்கும், வெள்ளை மாளிகை அதிகாரிக்கும் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அந்த நிருபர் வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.
 | 

சி.என்.என் நிருபரை தடை செய்ய வெள்ளை மாளிகை நடத்திய நாடகம்!

அதிபர் டொனால்ட் ட்ரம்ப்பிடம் தொடர்ந்து கேள்வி கேட்டுக்கொண்டிருந்த சி.என்.என் நிருபருக்கும், வெள்ளை மாளிகை அதிகாரிக்கும் ஏற்பட்ட சர்ச்சையை தொடர்ந்து, அந்த நிருபர் வெள்ளை மாளிகையில் இருந்து தடை செய்யப்பட்டுள்ளார்.

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புக்கும், சி.என்.என் செய்தி நிறுவனத்துக்கும் இடையே தொடர்ந்து பல சர்ச்சைகள் இருந்து வருகின்றன. சி.என்.என் நிறுவனத்தை போலி செய்தி நிறுவனம் என பலமுறை ட்ரம்ப் விமர்சித்துள்ளார். அதேபோல,  அந்நிறுவனத்தின் வெள்ளை மாளிகை சிறப்பு நிருபரான ஜிம் அகோஸ்டாவை ட்ரம்ப் பலமுறை நேரிலேயே விமர்சித்துள்ளார். வெள்ளை மாளிகை செய்தியாளர் சந்திப்பில் ட்ரம்ப்பிடம் கேள்வி கேட்கும் போது, அகோஸ்டாவை ட்ரம்ப் அவமதித்து பேசியுள்ளார். 

இந்நிலையில், நேற்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில், மத்திய அமெரிக்காவில் இருந்து அமெரிக்காவை நோக்கி வந்துகொண்டிருக்கும் அகதிகளை பற்றி அகோஸ்டா கேள்வி எழுப்பினார். அதற்கு ட்ரம்ப் பதிலளிக்காமல் அடுத்த கேள்விக்கு செல்ல, விடாப்பிடியாக இருந்த அகோஸ்டா, தனது கேள்விக்கு பதிலளிக்குமாறு ட்ரம்ப்பை வலியுறுத்தினார். அதற்கு ட்ரம்ப், அகோஸ்டா ஒரு மோசமான நிருபர் என்றும், அவரை பணியில் அமற்றிதற்காக சி.என்.என் வெட்கப்பட வேண்டும் என கூறினார். தொடர்ந்து அகோஸ்டாவை ட்ரம்ப் கடுமையாக விமர்சித்துக் கொண்டிருந்தார். 

அப்போது, வெள்ளை மாளிகை பெண் ஊழியர் ஒருவர் வந்து, அகோஸ்டாவிடம் இருந்த மைக்கை பிடுங்க முயற்சித்தார். அப்போது, அகோஸ்டாவின் கை அந்த பெண் மீது பட்டதாகவும், அந்த பெண்ணிடம் அகோஸ்டா மோசமாக நடந்து கொண்டதாகவும் கூறி, அவரது வெள்ளை மாளிகை அனுமதியை ரத்து செய்துள்ளார், வெள்ளை மாளிகை செய்தித் தொடர்பாளர் சாரா சாண்டர்ஸ். 

வீடியோவில், மைக்கை பிடுங்க முயன்ற அந்த பெண்ணை, அகோஸ்டா தடுக்க மட்டுமே முயன்றது தெளிவாக தெரிகிறது. ஆனால், அகோஸ்டா அவரை தாக்கியதாக வெள்ளை மாளிகை கூறுவது சமூக வலைதளங்களில் கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP