வர்த்தகப் போரில் வெற்றி எங்களுக்கே: சீனாவுக்கு அமெரிக்கா சவால்

சீனாவுடனான வர்த்தகப் போரில் நாங்கள்தான் வெற்றிப் பெறுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.
 | 

வர்த்தகப் போரில் வெற்றி எங்களுக்கே: சீனாவுக்கு அமெரிக்கா சவால்

சீனாவுடனான வர்த்தகப் போரில் நாங்கள்தான் வெற்றிப் பெறுவோம் என்று அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார்.

அமெரிக்க செய்தி நிறுவனமான ஃபாக்ஸ் தொலைக்காட்சிக்கு அமெரிக்க வெளியுறவுத் துறை அமைச்சர் மைக் பாம்பியோ பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், "சீனா தனது செயல்பாடுகளால் அமெரிக்காவுக்கு நன்மையை ஏற்படுத்தியுள்ளது. சீனா வெளிப்படைத் தன்மையுடனும், சட்டத்தை மதித்தும் நடக்க வேண்டும். மேலும் நீங்கள் அறிவு சார்ந்த சொத்துகளை திருடிவிட முடியாது" என்று கூறினார். 

கடந்த ஜூலை மாதம் 5000 கோடி டாலர் அளவிற்கு சீன பொருட்களுக்கு வரி விதிக்கப்பட்டது. அடுத்து வரும் வாரத்தில் மேலும் 2000 கோடி டாலர் அளவிற்கு வரி விதிக்கப்பட உள்ளது. இந்த தொகையின் அளவு இந்த ஆண்டின் இறுதியில் மேலும் அதிகரிக்கும் என அமெரிக்கா தெரிவித்துள்ளது. அமெரிக்காவிற்கு பதிலடி தரும் வகையில் அந்நாட்டு பொருட்களுக்கு சீன அரசு வரியை அதிகரித்து வருகிறது. இதன் காரணமாக இருநாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் உருவானது.

தொடர்ந்து இரு நாடுகளும் மாறி மாறி இறக்குமதிப் பொருட்களுக்கு வரியை உயர்த்தி வந்த சூழ்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையே வர்த்தகப் போர் சூழும் நிலை ஏற்பட்டுள்ளது. இதன் தாக்கம் மற்ற நாடுகளையும் பாதிக்கிறது. 

பல முதலீட்டாளர்களும் தொழில் வல்லுனர்களும் இது குறித்து தொடர்ந்து எச்சரித்து வருகின்றனர்.  அமெரிக்கா - சீனா இடையிலான நட்புறவை இந்த வர்த்தகப் போர் சிதைத்து வருகிறது. சில வாரங்களுக்கு முன்பு வர்த்தகப் போருக்கு அலிபாபா நிறுவனம் தயாராக இருப்பதாகவும், அமெரிக்கப் பொருட்கள் விற்பனை குறைப்பதாகவும், உள்நாட்டுப் பொருட்களை வாடிக்கையாளர்கள் வாங்க வேண்டும் என்றும் ஜாக் மா சீன மக்களுக்குக் கோரிக்கை வைத்து இருந்தார். இவரது பேச்சு பரபரப்பை ஏற்படுத்தியது குறிப்பிடத்தக்கது. 

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP