தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை நிறுத்தியது அமெரிக்கா

தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும் பல்வேறு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது.
 | 

தென் கொரியாவுடனான ராணுவ பயிற்சிகளை நிறுத்தியது அமெரிக்கா

தென் கொரியாவுடன் இணைந்து அமெரிக்கா மேற்கொள்ளும் பல்வேறு ராணுவ பயிற்சிகளை அமெரிக்கா ரத்து செய்துள்ளது. 

அமெரிக்காவுக்கு வடகொரியா மிகப்பெரிய அச்சுறுத்தலாக இருந்தது. அமெரிக்காவுக்கு மட்டுமல்ல... அண்டைநாடுகளான தென்கொரியா, ஜப்பான் உள்ளிட்ட நாடுகளுக்கும் வடகொரியா மிகப்பெரிய அச்சுறுத்தல்தான். இதனால், தென்கொரியாவில் அமெரிக்கா தன்னுடைய ராணுவ முகாமை அமைத்து தீவிர ராணுவ பயிற்சியில் ஈடுபட்டு வருகிறது. மேலும், தென்கொரிய ராணுவத்துடன் இணைந்து பலதரப்பட்ட ராணுவ பயிற்சிகளையும் செய்து வருகிறது. 

இந்தநிலையில், வடகொரிய சர்வாதிகாரி கிம் ஜாங் உன் - டிரம்ப் சந்தித்திப்பு நிகழ்ந்தது. இதனால், பதற்றம் சற்று தணிந்துள்ளது. அமைதியை நிலைநிறுத்தத் தென் கொரியாவுடனான போர் பயிற்சிகளை ரத்து செய்வதாக அமெரிக்கா அறிவித்திருந்தது. இது குறித்து அமெரிக்காவின் ராணுவ தலைமையகமான பெண்டகன் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "சிங்கப்பூர் மாநாட்டின் முடிவுக்கு ஆதரவு அளிக்கும் வகையில் தென் கொரியாவுடனான சில ராணுவ பயிற்சிகளை ரத்து செய்ய அந்நாட்டின் மூத்த ராணுவ அதிகாரிகளிடம் தெரிவித்துள்ளோம். ஆகஸ்டு மாதம் நடைபெற இருந்த பயிற்சிகள் ரத்து செய்யப்படுகின்றன. அடுத்த மூன்று மாதத்தில் நடத்துவது என்று திட்டமிடப்பட்டிருந்த வீரர்கள் பரிமாற்றத் திட்டமும் ரத்துச் செய்யப்படுகிறது. வட கொரியா தொடர்ந்து நல்லபடியாகச் செயல்படும் என்ற நம்பிக்கையின் கீழ் இவை செய்யப்படுகிறது. அந்நாட்டின் செயல்பாட்டைப் பொறுத்து இதில் மாறுதல் இருக்கும்" என்று கூறப்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP