அமெரிக்காவும் வளரும் நாடுதான்... இந்தியாவுக்கான மானியத்தை நிறுத்தவோம்- ட்ரம்ப் ஆவேசம்

இந்தியாவும், சீனாவும் வளர்ந்துவரும் நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கொண்டு ஏராளமான மானியங்களை அனுபவிக்கின்றன. இந்த நாடுகளுக்கு நாங்கள் ஏன் நிதியுதவி அளிக்க வேண்டும், மானியத்தை நிறுத்துவோம் என்று ட்ரம்ப் பேசியுள்ளார்.
 | 

அமெரிக்காவும் வளரும் நாடுதான்... இந்தியாவுக்கான மானியத்தை நிறுத்தவோம்- ட்ரம்ப் ஆவேசம்

இந்தியாவும், சீனாவும் வளர்ந்துவரும் நாடுகள் என்ற பட்டியலில் இருந்து கொண்டு ஏராளமான மானியங்களை அனுபவிக்கின்றன. இந்த நாடுகளுக்கு நாங்கள் ஏன் நிதியுதவி அளிக்க வேண்டும், மானியத்தை நிறுத்துவோம் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் ஆவேசமாகப் பேசியுள்ளார்.

சிகாகோ மாநிலத்தில் உள்ள நார்த் டகோடா பர்கோ நகரில் நிதி திரட்டும் நிகழ்ச்சியில் அமெரிக்க அதிபர் ட்ரம்ப் பங்கேற்று பேசினார். அப்போது வர்த்தக போர் ஏற்பட்டிருக்கும் சீனா, இந்தியா மற்றும் உலக வர்த்தக அமைப்பு உள்ளிட்டவைகளை விமர்சனம் செய்தார்.

அப்போது பேசிய அவர், ''மற்ற நாடுகளை விட விரைவாக வளர வேண்டும் என்றால், அமெரிக்கா தன்னையும் வளரும் நாடாகவே கருதிக் கொள்ள வேண்டும். பொருளாதார வலிமை மிக்க நாடாக சீனா உருவெடுக்க, உலக வர்த்தக அமைப்பு அனுமதித்து விட்டன. 

உலக அளவில் சீனாவும், இந்தியாவும் பொருளாதாரத்தில் மிகப்பெரிய நாடுகளாக உருவாவதற்கு உலக வர்த்தக அமைப்புதான் காரணம். அந்த அமைப்பைத் தான் குற்றம் சாட்டுவேன். நாம் இந்த இரு நாடுகள் தவிர்த்து இன்னும் பிற நாடுகளையும் வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் வைத்திருக்கிறோம். ஆனால், சில நாடுகள் இன்னும் போதுமான வளர்ச்சி பெறவில்லை, அப்படி இருந்தும் கூட அனைத்து வளர்ந்து வரும் பொருளாதாரத்தை கொண்ட நாடுகளுக்கு நாம் மானியம் அளிக்கிறோம்.

இதை நினைத்துப் பார்த்தாலே வேடிக்கையாக இருக்கிறது. மற்ற சிறிய நாடுகள் வேண்டுமானால், வளர்ந்து வரும் பொருளாதார நாடுகள் எனலாம், ஆனால், சீனாவும், இந்தியாவும் மானியத்தை வாங்கிக்கொண்டு நாங்களும் வளர்ந்து வரும் நாடுகள் என்று சொல்கின்றன. எனக்குத் தெரிந்து உலக வர்த்தக அமைப்பு மிகவும் மோசமாகச் செயல்படுகிறது. பெரும்பாலானோருக்கு உலக வர்த்தக அமைப்பு என்றால் என்ன, அதன் பணி என்ன என்று தெரியவில்லை. உலக வர்த்தக அமைப்புதான் சீனாவை வளரவிட்டு வேடிக்கை பார்க்கிறது, அனுமதிக்கிறது.

சீனா தன்னை வளர்த்துக் கொள்வதற்காக ஆண்டுதோறும் அமெரிக்காவிடம் இருந்து 50 ஆயிரம் கோடி டாலரை மானியமாக எடுத்துக்கொள்கிறது. இந்த மானியத்தை நிறுத்தப் போகிறேன். சீனாவும், இந்தியாவும் வளர்வதற்கு நாம்தான் பணத்தையும், மானியத்தையும் அளிக்கிறோம். இது வேடிக்கையாக இருக்கிறது. இவர்கள் வளர நாம் ஏன் மானியம் அளிக்க வேண்டும். அனைத்து மானியத்தையும் நிறுத்த வேண்டும், விரைவில் நிறுத்துவோம்.

நாமும் வளர்ந்து வரும் நாடுதான். நான் சொல்வது சரிதானே. இப்போதுவரை நாமும் வளர்ந்துவரும் பொருளாதாரத்தைத் தான் கொண்டிருக்கிறோம். நானும் அமெரிக்காவை வளர்ந்து வரும் நாடுகள் பட்டியலில் அமெரிக்காவைச் சேர்க்க விரும்புகிறேன். மற்ற நாடுகளைக் காட்டிலும் வேகமாக வளர்ந்து வருகிறோம் என்று வேண்டுமானால் சொல்லலாம்'' என்று பேசினார். 

Newstm.in

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP