பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக உதவி செய்துள்ளது- டிரம்ப் காட்டம்

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக உதவி செய்துள்ளது- டிரம்ப் காட்டம்
 | 

பாகிஸ்தானுக்கு அமெரிக்கா முட்டாள்தனமாக உதவி செய்துள்ளது- டிரம்ப் காட்டம்


புத்தாண்டு பிறந்த முதல் நாள், அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் ட்விட்டரில் செய்துள்ள பதிவு ஒன்று உலகளவில் மிகுந்த பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 

"கடந்த 15 ஆண்டுகளாக பாகிஸ்தானிற்கு 33 பில்லியன் டாலர் வரை அமெரிக்கா முட்டாள்தனமாக உதவி செய்திருக்கிறது. இதற்கு பதிலாக பாகிஸ்தான், பொய்யையும், வஞ்சகத்தையும் தான் திருப்பிக் கொடுத்துள்ளது. தீவிரவாதிகளின் சொர்க பூமியாக பாகிஸ்தான் திகழ்கிறது. ஆப்கானில் நாங்கள் தீவிரவாதிகள் தேடுதல் வேட்டையில் இறங்கியிருந்த போதும், பாகிஸ்தான் அவர்களுக்கு அடைக்கலம் கொடுத்திருக்கிறது. இனியும் எங்களிடம் இருந்து உங்களுக்கு உதவி கிடைக்காது என்று காட்டமாக" குறிப்பிட்டிருந்தார். 

தீவிரவாதியான ஹபீஸ் சயீத், 2018ம் ஆண்டு பாகிஸ்தானில் நடக்க இருக்கும் பொது  தேர்தலில் போட்டியிடுவதாக அறிவிக்கப்பட்டதற்கு எதிரொலியாக இந்த ட்வீட் அமைந்துள்ளது. தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கையில் பாகிஸ்தான் போதுமான ஒத்துழைப்பு தராததன் விளைவாக, இரண்டு நாட்களுக்கு முன்னர், பாகிஸ்தானிற்கு அளிக்க இருந்த 255 மில்லியன் டாலரை நிறுத்தி வைப்பது குறித்து பரிசீலனை செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

ட்ரம்ப்பின் ட்வீட்டிற்கு இதுவரை பாகிஸ்தான் தரப்பில் இருந்து பதில் வரவில்லை என்றாலும், இந்த ட்வீட்டால் பாகிஸ்தானிற்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP