பாகிஸ்தானுக்கு வழங்கிய நிதியை நிறுத்திய அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 1,624 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.
 | 

பாகிஸ்தானுக்கு வழங்கிய நிதியை நிறுத்திய அமெரிக்கா

பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த 1,624 கோடி ரூபாய் நிதியை நிறுத்தி உள்ளதாக அமெரிக்கா அறிவித்துள்ளது.

வெளிநாட்டு ராணுவ நிதி ஒப்பந்தம் கீழ் பாகிஸ்தானுக்கு அமெரிக்கா ஆண்டு தோறும் கோடி கணக்கான ரூபாயை ராணுவ நிதியாக அளித்து வருகிறது. ஆனால் இந்த ஆண்டு முதல் அந்த நிதியை அளிக்கப்போவதில்லை என தற்போது அறிவித்துள்ளது. பாகிஸ்தான் தீவிரவாதத்திற்கு புகலிடம் கொடுப்பதாகவும், அதற்கு நிதி உதவி அளிப்பது முட்டாள் தனமானது என அமெரிக்கா அதிபர் டிரம்ப் நேற்று ட்விட்டரில் சாடி இருந்தார். இதனை தொடர்ந்து அமெரிக்கா இந்த முடிவை எடுத்துள்ளது. ஏற்கனேவே பாகிஸ்தானுக்கு வழங்கி வந்த நிதியை நிறுத்துவது தொடர்பாக அமெரிக்கா ஆலோசித்து வந்தது. தற்போது அந்த திட்டத்தை செயல்படுத்தி உள்ளது.

இது குறித்து பேசிய அமெரிக்க அரசு நிர்வாக உயர் அதிகாரி ஒருவர், "பாகிஸ்தானுக்கு 1,624 கோடி ரூபாய் நிதியை அமெரிக்கா அளிக்கப்போவதில்லை. பாகிஸ்தானில் நடைபெறும் தீவிரவாத செயல்களுக்கு அந்நாட்டு அரசு கடும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதிபர் தெளிவாக கூறி விட்டார். எதிர்கால பாதுகாப்பு உட்பட அமெரிக்காவின் தெற்காசிய திட்டங்களுக்கு பாகிஸ்தான் அளிக்கும் ஒத்துழைப்பை பொறுத்தே அந்நாட்டுடனான அமெரிக்காவின் உறவு குறித்து முடிவு செய்யப்படும்" என்றார். அமெரிக்காவின் இந்த முடிவுக்கு பாகிஸ்தான் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP