ஏவுகணை அபாயத்தால் அதிர்ந்தது அமெரிக்கா

ஏவுகணை அபாயம்: அதிர்ந்தது அமெரிக்கா
 | 

ஏவுகணை அபாயத்தால் அதிர்ந்தது அமெரிக்கா


அமெரிக்கவின் ஹவாய் மாகாணத்தில் நேற்று ஏவுகணை அபாய எச்சரிக்கை விடுக்கப்பட்டதை தொடர்ந்து, பொதுமக்கள் கடும் அச்சத்தில் ஆழ்ந்தனர். பின்னர் அது தவறான எச்சரிக்கை, என தெரிவிக்கப்பட்டது.

திடீரென நேற்று ஹவாய் மக்களின் மொபைல்களுக்கு அரசிடம் இருந்து ஏவுகணை அபாய எஸ்.எம்.எஸ் வந்துள்ளது. "ஹவாய் மாகாணத்தை நோக்கி கண்டம் விட்டு கண்டம் பாயும் ஏவுகணை வந்துகொண்டிருக்கிறது. பாதுகாப்பான இடத்தில் ஒளிந்து கொள்ளுங்கள். இது சோதனை அல்ல" என அந்த எஸ்.எம்.எஸ்ஸில் கூறப்பட்டிருந்தது. இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பீதியில் ஓடத் துவங்கினர்.

சிறிது நேரத்தில் அது தவறான எச்சரிக்கை என அம்மாகாண ஆளுநர் மன்னிப்பு கேட்டுள்ளார். ஒரு ஊழியர் தவறான பட்டனை அழுத்தியதால் இந்த தவறு ஏற்பட்டதாக அவர் கூறினார். இதைத் தொடர்ந்து, இந்த விவகாரத்தில் முழு விசாரணை நடத்தப்படும் என அமெரிக்க அரசு தெரிவித்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP