ஹபீஸ் சயீத் ஆதரவு கட்சியை தீவிரவாத அமைப்பாக அறிவித்தது அமெரிக்கா

பாகிஸ்தான் நாட்டை சேர்ந்த வலதுசாரி கட்சியான மில்லி முஸ்லீம் லீக்கை, தீவிரவாத அமைப்பாக அறிவித்துள்ளது அமெரிக்க அரசு.
 | 

பாகிஸ்தான் அரசு தீவிரவாதிகளுக்கு அடைக்கலம் தருவதாக தொடர்ந்து அமெரிக்கா குற்றம் சாட்டி பல நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. பாகிஸ்தானுக்கு வழங்கவேண்டிய நிதியை அமெரிக்க அரசு முடக்கியது. மேலும், தீவிரவாதிகளுக்கு எதிராக போதிய நடவடிக்கைகளை பாகிஸ்தான் எடுக்காததாக அதிபர் ட்ரம்ப் தொடர்ந்து குற்றம் சாட்டி வருகிறார். 

இந்நிலையில், தீவிரவாதி ஹபீஸ் சயீத் ஆதரவு அரசியல் கட்சியான மில்லி முஸ்லிம் லீக்கை, தீவிரவாத இயக்கங்கள் பட்டியலில் அமெரிக்க அரசு தற்போது சேர்த்துள்ளது. தீவிரவாதிகளுக்கு இதுபோன்ற அமைப்புகள் மூலம் கிடைக்கும் நிதியுதவியை தடுக்க இந்த நடவடிக்கை எடுத்துள்ளதை அமெரிக்க கருவூலத்துறை தெரிவித்துள்ளது. அதேபோல தெஹ்ரீக்-ஈ- ஆஸாதி-ஈ-காஷ்மீர் என்ற அமைப்பும் தீவிரவாத இயக்கமாக அறிவிக்கப்ட்டுள்ளது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP