டிரம்ப் தொடுத்த வர்த்தக போர்; பொருளாதார ஆலோசகர் ராஜினாமா

அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப், சில தினங்களுக்கு முன் திடீரென உள்நாட்டு உற்பத்தி கொள்கைகளை மாற்றியமைக்க உள்ளதாக தெரிவித்தார்.
 | 

அமெரிக்காவுக்குள் இறக்குமதி செய்யப்படும் எஃகு மீது 25% வரியும், அலுமினியம் மீது 10% வரியும் விதிக்க உள்ளதாக தெரிவித்தார். டிரம்ப்பின் இந்த அறிவிப்பு எந்த பொருளாதார ஆலோசனை கூட்டமும் இல்லாமல், எந்த நிபுணரின் கருத்துக்களையும் கேட்காமல் எடுக்கப்பட்டது என பலரும் விமர்சித்தனர். 

இந்த திட்டம் செயல்படுத்தப்பட்டால், அமெரிக்க மக்களை தான் அது பாதிக்கும் என பலர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.  மேலும், இதனால் அமெரிக்காவுக்கும் மற்ற நாடுகளுக்கும் இடையே வர்த்தக போர் உருவாகும் எனவும் எச்சரிக்கப்பட்டது. ஆனால், டிரம்ப் "வர்த்தகப் போர்கள் நல்லது தான். அதை வெல்வது ரொம்ப ஈஸி" என கூறினார்.

கனடா மற்றும் ஐரோப்பிய யூனியன் இந்த முடிவுக்கு கடும் கண்டனம் தெரிவித்துள்ளன. இதற்கு பதிலடியாக அமெரிக்க பொருட்கள் மீது தாங்களும் அதிக வரியை விதிப்போம் என ஐரோப்பிய யூனியன் தலைவர் தெரிவித்துள்ளார். 

இந்நிலையில், டிரம்ப்பின் பொருளாதார ஆலோசகர் மைக்கேல் கோஹன் தனது பதவியை ராஜினாமா செய்துள்ளார். புதிய வரிகள் விதிப்பதில் டிரம்ப்புடன் ஏற்பட்டுள்ள கருத்து வேறுபாடு காரணமாக இந்த முடிவை அவர் எடுத்துளளதாக தெரிகிறது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP