கஷோகி கொலைக்கு உத்தரவிட்டது சவுதி இளவரசர் தான்: சிஐஏ கூறுகிறது 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவு அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
 | 

கஷோகி கொலைக்கு உத்தரவிட்டது சவுதி இளவரசர் தான்: சிஐஏ கூறுகிறது 

பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொலை செய்ய சவுதி பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மான்தான் உத்தரவு அளித்தார் என அமெரிக்காவின் மத்திய புலனாய்வு நிறுவனமான சிஐஏ நம்புவதாக அமெரிக்க ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. 

இது போன்ற ஒரு சம்பவம், முகமத் பின் சல்மானின் அனுமதியுடன்தான் நடந்திருக்கும் என அமெரிக்க அதிகாரிகள் நினைக்கின்றனர்.  இளவரசர் சல்மானின் சகோதரரும் அமெரிக்காவிற்கான சவுதி தூதருமான காலித், பின் சல்மானுக்கு மேற்கொண்ட தொலைப்பேசி அழைப்பை வைத்து, சிஐஏ மதிப்பீடு செய்துள்ளதாக வாஷிங்டன் போஸ்ட் செய்தி வெளியிட்டுள்ளது. 

காலித், கஷோகியை போனில் அழைத்து, அவர் தூதரகத்துக்கு பாதுகாப்பாக செல்லலாம் என உத்தரவாதம் அளித்ததாக கூறப்படுகிறது. எனினும், இதனை சவுதி தூதரகமும் மறுத்துள்ளது. இந்த செய்தி தொடர்பாக வெள்ளை மாளிகை மற்றும் அமெரிக்க வெளியுறவுத்துறை கருத்து தெரிவிக்கவில்லை. ஆனால் சி ஐ ஏ-வின் முடிவுகள் அவர்களுக்கு தெரிவிக்கப்பட்டுவிட்டதாக செய்திகள் தெரிவிக்கின்றன. 

மேலும், கஷோகியை கொலை செய்தவர்களின் குழுவில் உள்ள ஒரு நபர், பட்டத்து இளவரசரின் கீழ் உள்ள மூத்த அதிகாரி ஒருவருக்கு போன் செய்துள்ளதையும் அவர்கள் ஆய்வு செய்ததாக தெரிகிறது. சல்மானுக்கு தெரியாமல் அல்லது அவர் தலையீடு இல்லாமல் இந்த கொலை நடந்திருக்க வாய்ப்பே இல்லை என்றும் வாஷிங்டன் போஸ்ட் செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்தான்புல்லிலுள்ள சவுதி அரேபிய தூதரகத்தில் அக்டோபர் 2ஆம் தேதி கஷோகிக்கு மரணம் விளைவிக்கும் ஊசி செலுத்தப்பட்டதாக, வியாழனன்று ரியாதில் நடந்த செய்தியாளர்கள் சந்திப்பில், காவல் அதிகாரி ஷலான் பின் ராஜிஹ் தெரிவித்தார். அவர் மரணம் தொடர்பாக 11 பேர் மீது குற்றஞ்சாட்டப்பட்டுள்ளதுடன், அதில் 5 பேருக்கு மரண தண்டனை வழங்குவதற்கும் கோரிக்கை விடுக்கப்பட்டு வழக்கு தொடரப்பட்டுள்ளது

அதோடு, கஷோகி கொலை என்பது முன்கூட்டியே திட்டமிடப்பட்டது என்றும் சவுதி முகவர்கள் குழுவே இதனை செய்துள்ளதாகவும் துருக்கி அதிகாரிகள் தெரிவித்தனர்.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP