மீண்டும் முடங்கிய அமெரிக்க அரசு

மீண்டும் முடங்கிய அமெரிக்க அரசு
 | 

மீண்டும் முடங்கிய அமெரிக்க அரசு


அமெரிக்க நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்வதில் சிக்கல் ஏற்பட்டதால், நேற்று இரவு மீண்டும் அரசு முடங்கியது.  ஆனால், சிறிது நேரத்தில் சமரசம் ஏற்படுத்த புதிய இடைக்கால பட்ஜெட்டை நாடாளுமன்ற இரு சபைகளும் நிறைவேற்றியதால், அரசு மீண்டும் இயங்கத் துவங்கியது.

அமெரிக்க நாடாளுமன்றத்தின் இரு சபைகளிலும் பெரும்பான்மை வகிக்கும் குடியரசு கட்சிக்கும், எதிர்க்கட்சியான ஜனநாயக கட்சிக்கும் இடையே பட்ஜெட் பேச்சுவார்த்தைகளில் சிக்கல் ஏற்பட்டதால், கடந்த மாதம் அரசு பட்ஜெட் காலாவதியானது. நிதி இல்லாத காரணத்தால் அரசு சேவைகள் அனைத்தும் மூடப்பட்டன. இந்த காலத்தில் அவசர, அத்தியாவசிய சேவைகள் மட்டும் செயல்படும். கடந்த மாதம் 4 நாட்கள் இந்த அரசு முடக்கம் நீடித்தது.

அதன்பின், பிப்ரவரி 8ம் தேதி வரை நீடிக்கும் இடைக்கால பட்ஜெட் நிறைவேற்றப்பட்டது. இந்நிலையில், நேற்று இரவுதான் இடைக்கால பட்ஜெட்  முடிவுக்கு வந்தது. இந்நிலையில், மற்றொரு இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்ற பேச்சுவார்த்தைகள் நடத்தப்பட்டன.

ஆனால், மீண்டும் அந்த பேச்சுவார்த்தைகள் தோல்வியடைந்தன. பட்ஜெட் கீழ்சபையில் நிறைவேற்றப்பட்டாலும், செனட் சபையில் தடை செய்யப்பட்டது. இந்த முறை எதிர்க்கட்சியினர் போதுமான அளவு இடைக்கால பட்ஜெட்டுக்கு ஓட்டளித்த போதும், ஆளும் கட்சியை சேர்ந்த ரேண்ட் பால் என்ற எம்.பி, தனது கட்சி எம்.பி.க்கள் பொறுப்பில்லாமல் செயல்படுவதாக குற்றம் சாட்டி, இடைக்கால பட்ஜெட்டை நிறைவேற்ற விடாமல் செய்தார்.

நேற்று இரவு 12 மணிக்கு மீண்டும் அரசு முடங்கியது. ஆனால்,  அவசர அவசரமாக, மற்றொரு இடைக்கால பட்ஜெட்டை வரைந்து, போதுமான ஓட்டுக்களை பெற்றனர். இரவு 1.30 மணிக்கு செனட் சபை இந்த பட்ஜெட்டை நிறைவேற்றிய பின், அதிகாலை 5.30 மணிக்கு கீழ்சபையும் நிறைவேற்றியது. அதனால், விடிவதற்குள் இந்த அரசு முடக்கம் முடிவுக்கு வந்தது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP