தேசிய கீதத்தின் வரிகள் மாற்றப்பட உள்ளது

தேசிய கீதத்தின் வரிகள் மாற்றப்பட உள்ளது
 | 

தேசிய கீதத்தின் வரிகள் மாற்றப்பட உள்ளது


ஒவ்வொரு நாட்டின் தன்மையை பறைசாற்றும் விதமாக தேசிய கீதம் இருக்கும். இது அந்நாட்டிற்கு பெருமைக்குரிய விஷயமாக கருதப்படுகிறது. தேசிய கீதம் பாடும் போது எழுந்து வணக்கம் செலுத்தாதவர்களுக்கு தண்டைனையெல்லாம் கிடைத்துள்ளது. இந்நிலையில் கனடா அரசு, பாலின வேறுபாடு இல்லாத வகையில், அவர்களது தேசிய கீதத்தில் சில வார்த்தைகளை மாற்றிட முடிவு செய்துள்ளது. 


கனடாவின் தேசிய கீதத்தில் Sons என்று ஆங்கிலத்தில் ஆண்களை மட்டுமே குறிப்பிடும் வகையில் ஒரு வார்த்தை உள்ளது. இந்த வார்த்தைக்கு பதிலாக 'all of us command' என்று எந்த பாலினத்தையும் குறிப்பிடாமல் பொதுவாக இருக்கும் வகையில் மாற்ற முடிவு செய்யப்பட்டுள்ளது. இதற்கான மசோதாவில் கவர்னர் ஜெனரல் ஜூலி பெயட்டி கையெழுத்திட்டதும் கனடாவின் தேசிய கீதம் அதிகாரபூர்வமாக மாற்றப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP