2 நாட்களில் கஷோகி படுகொலை விவகாரம் அம்பலமாகும்: ட்ரம்ப் திட்டவட்டம் 

துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி துணைத் தூதரகத்தில் பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை கொன்றது யார் என்ற விவரம் இன்னும் இரு நாட்களில் அம்பலமாகும் என்று அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார்.
 | 

துருக்கி நாட்டு தூதரகத்தில் சவுதி பத்திரிகையாளர் ஜமால் கஷோகியை படுகொலை செய்யப்பட்ட சம்பவத்துக்கு சவுதி இளவரசர் முஹம்மது பின் சல்மான் மீது அமெரிக்க உளவுப்படையான சி.ஐ.ஏ. குற்றம்சாட்டியது. இது குறித்து வெள்ளை மாளிகைக்கு அதிகாரபூர்வ தகவல் அளிக்கப்பட்டுவிட்டதாகவும் செய்திகள் வெளியாகின. 

இந்நிலையில், கலிபோர்னியாவில் காட்டுத் தீயால் சின்னாபின்னமான பகுதிகளை பார்வையிட்ட அமெரிக்க அதிபர் ட்ரம்ப் செய்தியாளர்களுக்கு பேட்டியளித்த பேட்டியின்போது. ''ஜமால் கஷோகியை கொன்றது யார்? எப்படி கொல்லப்பட்டார் என்பது தொடர்பான முழு விபரங்களை இன்னும் ஓரிரு நாட்களில் நாங்கள் பகிரங்கப்படுத்துவோம்'' என குறிப்பிட்டுள்ளார்.   

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP