பெரும் நிதியிழப்பும் வாழ்வாதார சீர்கேடும் ஏற்படும்: அமெரிக்காவை எச்சரிக்கை பருவநிலை அறிக்கை 

பருவநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தாமல் போனால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்கள் நிதியிழப்பும், மனித ஆரோக்கியத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சீர்கேடு ஏற்படும் என்று பருவநிலை குறித்த அறிக்கை எச்சரித்துள்ளது.
 | 

பெரும் நிதியிழப்பும் வாழ்வாதார சீர்கேடும் ஏற்படும்: அமெரிக்காவை எச்சரிக்கை பருவநிலை அறிக்கை 

பருவநிலை மாற்றத்தில் கவனம் செலுத்தாமல் போனால், அமெரிக்காவுக்கு பல பில்லியன் டாலர்கள் மதிப்பில் நிதியிழப்பும், மனித ஆரோக்கியத்துக்கும் வாழ்வாதாரத்துக்கும் சீர்கேடு ஏற்படும் என்று பருவநிலை குறித்த அறிக்கை ஒன்று எச்சரித்துள்ளது.

நான்காவது தேசிய பருவநிலை ஆய்வு வெளியிட்டிருக்கும் அறிக்கையில், மனித சுகாதாரம், பாதுகாப்பு, வாழ்க்கை தரம் மற்றும் பொருளாதார வளர்ச்சியின் விகிதம் ஆகியவற்றுக்கு பருவநிலை மாற்றம் பெரும் சவாலாக இருக்கும் என கூறப்பட்டுள்ளது.

ஆனால் பல அமெரிக்க அரசு முகமைகள் மற்றும் துறைகள் பலவற்றின் உதவியுடன் தயாரிக்கப்பட்ட அந்த அறிக்கை சரியானதாக இல்லை என வெள்ளை மாளிகை தெரிவித்துள்ளது.

அமெரிக்காவுக்கு எச்சரிக்கை விடும் அறிக்கை: 

பசுமை இல்ல வாயுக்கள் அதீத அளவில் வெளியேற்றப்பட்டால், இந்த நூற்றாண்டின் இறுதியில் சில பொருளாதார துறைகளில் ஆண்டுக்கான நஷ்டமானது பல பில்லியன் கணக்காக உயரும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் சர்வதேச அளவில் கணிசமாகவும் மற்றும் நீடித்த காலத்துக்கும் பசுமை இல்ல வாயுக்களை வெளிப்படுத்துதல் குறைக்கப்பட வேண்டும். இல்லைஎன்றால்  இந்த நூற்றாண்டின் முடிவில் அமெரிக்காவின் உள்கட்டமைப்பு மற்றும் சொத்துக்களில் அது பெரிய நஷ்டத்தை ஏற்படுத்தும் மேலும் பொருளாதார வளர்ச்சிக்கும் முட்டுக்கட்டையாக இருக்கும்.  அடிக்கடி மாறும் வானிலை மற்றும் தீவரமான வானிலை சூழல்கள் ஆகியவை உட்பட பருவநிலை மாற்றங்களின் விளைவுகளில் பல நாடுகளில் உணரப்பட்டு வருவதாகவும், அந்த அறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இதனிடையே இந்த அறிக்கை நாம் எடுக்க வேண்டிய நடவடிக்கைகள் குறித்து கூறுவதாக சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் தெரிவிக்கின்றனர்.
அறிக்கையை தயாரித்தவர்களில் ஒருவரும், அமெரிக்காவில் அமைந்துள்ள விஞ்ஞானிகள் அமைப்பின் இயக்குநருமான ப்ரெண்டா எக்வூசெல், "பருவநிலை மாற்றமானது ஏதோ எதிர்காலத்தில் நடைபெறும் பிரச்சனையல்ல தற்போது நாம் எதிர்கொண்டிருக்கும் பிரச்சனை" என்று கூறியுள்ளார்.

இது குறித்து வெள்ளை மாளிகையின் செய்தி தொடர்பாளர் லிண்ட்சே வால்டர்ஸ் கூறுகையில், "நீண்டகாலமாக நிறுவப்பட்ட சூழலில் இருந்து முரண்பட்டு இந்த அறிக்கை உள்ளது." என்று தெரிவித்துள்ளார்.

நிராகரிக்கும் ட்ரம்ப்! 

இதே காரணங்களை குறிப்பிட்டு கடந்த அக்டோபர் மாதம் ஃபாக்ஸ் நியூஸ் தொலைக்காட்சியில், பருவநிலை மாற்றம் குறித்து தெரிவிக்கும் விஞ்ஞானிகளுக்கு அரசியல் உள்நோக்கங்கள் உள்ளதாக தெரிவித்தார் ட்ரம்ப்.  மேலும் பூமியின் வெப்பநிலை அதிகரித்து வருவதற்கு மனிதர்கள் காரணம் என்பதை தன்னால் நம்ப முடியவில்லை என்றும் தெரிவித்தார்.

ட்ரம்ப் பதவியேற்ற பிறகு பாரிஸ் பருவநிலை ஒப்பந்தத்திலிருந்து அமெரிக்கா வெளியேறியது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP