கலைத்து விட்ட ஆட்டு பஞ்சாயத்து...!

விண்வெளியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பல விஷயங்களுக்கு அவர்களை நம்ப வேண்டியது இல்லை. பக்கத்து நாட்டுக்காரன் செயற்கை கோளை தாக்கி அழித்துவிட்டு, எங்களை வேவு பார்த்தான் சார் என்று அறிக்கைவிடும் அபாயம் இருப்பது தான் காரணம்.
 | 

கலைத்து விட்ட ஆட்டு பஞ்சாயத்து...!

வடிவேலுவின் நகைச்சுவைகளி்ல் ஆடு திருடிய பஞ்சாயத்தை கலைத்துவிட்டது குறிப்பிடத்தக்கது. அதற்கு சற்றும் குறையாமல் அமெரிக்க அதிபர் டிரம்ப் ஏ–சாட் விவகாரத்தில் எடுத்த முடிவும் உள்ளது. 

அறிவியல் தொழில்நுட்ப வளர்ச்சி, தகவல் தொடர்பு துறையில் மேம்பாடு என்று நம்ம ஊர் தேர்தல் வாக்குறுதிமாதிரி ஏவுகணையை விண்ணில் ஏவ வேண்டியது. பின்னர் அதைக் கொண்டு அடுத்த நாட்டில் சென்று குண்டு போட வேண்டியது. இதுதான் வளர்ந்தநாடுகளின் வழக்கம். இதை தடுக்க வேண்டும் என்றால் அவர்கள்களிடம் தான் தொழில்நுட்பத்தை வாங்க வேண்டும். முடிந்தளவு அதை தராமல் இருக்க எல்லாவிதமான அரசியல் தந்திரங்களையும் கடைபிடிக்க வேண்டியது. இப்படிதான் இன்றளவு உலகம் உள்ளது. இதில் அமெரிக்கா, ரஷ்யாவின் பங்கு அதிகம். அவர்கள் மட்டும் எதைப் பற்றியும் கவலைப்படாமல் எதை வேண்டுமானாலும் செய்வார்கள். அடுத்தவர்கள் அதை செய்ய கூடாது. அப்போது தான் தங்கள் தயாரிப்பை விற்று காசு பார்க்க முடியும்.  

உதாரணமாக இன்று குகூள் மேப் செயலியில் கந்தசாமி, லொடுக்கு தெரு என்பது போல மிகப் பிரபலமாக இல்லாத இடத்தை தேடிப்பாருங்கள். வியக்கும் வகையில் அதற்கான பாதையை காட்டுகிறது. இதையே ஒரு சாட்டிலைட்டை மேலே விட்டு இந்தியாவில் உள்ள ஏர்போர்ட், ஆயுத தொழிற்சாலை என்று விரோத நாட்டில் அமர்ந்து கொண்டே தேடி பார்த்தால், அந்த இடத்தில் ஆபீசை கட்டடித்துவிட்டு  கேள் பிரண்டுடன் ஒதுங்கியதைக் கூட அறிந்து கொள்ளலாம். இப்படி நாட்டையின் ஜிப்பையே திறந்து விட்டு மானம் பற்றி பேசுபவர்களாகத்தான் அமெரிக்கா, ரஷ்யா, சீனா ஆகிய நாடுகளை தவிர்த்து மற்ற நாடுகள் இது வரை இருக்கிறது.

கலைத்து விட்ட ஆட்டு பஞ்சாயத்து...!

இவர்களின் அரசியலுக்கு ஆப்பு வைத்தது வடகொரியா அதிபர் கிம் ஜோங்தான். தொடர்ந்து சிவகாசி பட்டாசுகார்கள் போல எதைப்பற்றியும் கவலைப்படாமல் ராக்கெட் விட்டுக் கொண்டே இருந்ததால் தான் இன்று அமெரிக்கா அவர்களை அழைத்து பேச்சுவார்த்தை நடத்துகிறது. இப்போது இந்த பட்டியலில் இந்தியாவும் சேர்ந்துவிட்டது.  

1962ம் ஆண்டு சீனா அம்பி நம்நாட்டில் வாலை ஆட்டியதும், நாம் ஐநா பஞ்சாயத்தை கூட்டி அம்பியின் அட்டகாசத்தை அடக்கியதும் வரலாறு. இதில் 1964ம் ஆண்டு சீனா அணுஆயுதம் தயாரித்து சோதனை செய்து பார்க்கிறது. இதனால், அதைத் தொடர்ந்து பிரதமரான லால்பகதுார் சாஸ்திரி அணு ஆயுத சோதனை ஆய்வுகளுக்கு அனுமதி கொடுத்தார். அது தொடர்ந்து நடந்தது. இந்தியாதான் இந்திரா, இந்திரா தான் இந்தியா என்று மாறிவிட்ட சூழ்நிலையில் 1974ம் ஆண்டு பொக்ரானில் இந்தியா அணு ஆயுத சோதனையை வெற்றிகரமாக நிறைவேற்றியது. உடனே உலக நாடுகள் சமாதானத்தை வலியுறுத்தி அகிம்சா வாதிகளாக மாறிவிட்டனர். 

தமிழகத்தில் அரசு பஸ்களுக்கு தலைவர்கள் பெயர் வைத்த போது நன்றாக இருந்தது. பின்னர் அதுவே தொல்லையாக மாறியதும் எல்லா தலைவர்கள் பெயரும் அகற்றப்பட்டன. அப்போது பாத்தியா, பாத்தியா நம்ம ஜாதித் தலைவர் பெயர் வைத்த தால் தான் எல்லா தலைவர்கள் பெயரையும் எடுத்து விட்டார்கள் என்று தாண்டிக் குதித்தார்கள். அதற்கு இணையாக இந்திரா அணு ஆயுத சோதனை நடத்தும் வரை வல்லரசுகள் ஆயுதங்களை தயாரித்து குவித்தன. இந்தியா செய்ததும் எல்லோரும் அகிம்சா வாதிகளாக மாறி அறிவுரை கூறத் தொடங்கி விட்டால்கள். 

இதைத் தொடர்ந்து 24 ஆண்டுகள் கழித்து 1998ம் ஆண்டு வாஜ்பாய் ஆட்சியில் மீண்டும் அணு ஆயுத சோதனை நடத்தப்படுகிறது. இந்த முறை நாட்டின் மீது பொருளாதாரத் தடைவிதிக்கப்படுகிறது. சிறிது நாட்கள் கஷ்டப்பட்டு அதையும் சமாளித்தோம். அதிலும் எந்த நாடுகள் பொருளாதாரத் தடை விதித்ததோ, அங்கு வாழும் இந்தியர்கள் தங்கள் தாய் நாட்டை முன்னேற்ற குறிப்பிடித்தக்க உதவியை வழங்கினர்.

கடந்த சில நாட்களுக்கு முன்பு செயற்கை கோளை அழித்து புதுவிதமான ஆயுதத்தை சோதனை செய்தோம். நம்ம ஊரில் மோடி வெற்றி பெறதான் இது இப்போது செய்தோம் என்று தாண்டி குதிக்கிறோம். ஆனால் உலக நாடுகளுக்கு நம்ம அளவிற்கு அறிவு கிடையாது. அதனால் இதன் தாக்கம் மீண்டும் பொருளாதாரத் தடை வருமோ, அமெரிக்கா இதை கண்டிக்கும் என்று தான் எல்லோரும் நினைத்து வந்தோம். 

ஆனால் இந்த முறை அமெரிக்கா வடிவேலு ஸ்டைலில் , போ, போ இனிமே இப்படியெல்லாம் செய்யக் கூடாது என்று கருத்துக் கூறியதுடன் விட்டு விட்டது. 

மிஷன் சக்தி பற்றி அமெரிக்க பாதுகாப்பு செயலர் பாட்ரிக் ஷனாகன் கூறும் போது விண்வெளியை குப்பையாக்க கூடாது என்று கூறி உள்ளார். 

கலைத்து விட்ட ஆட்டு பஞ்சாயத்து...!

இவ்வளவு நாள் விட்ட செயற்கை கோள்கள் எல்லாம் விண் வெளியில் தான் குப்பையாக கிடக்கிறது. இதில் அமெரிக்க அம்பி விட்டது தான் அதிகம். அவா அதையெல்லாம் குறைக்க மாட்டா, ஆனால் நாம ஏதாவது செய்தால் விண்வெளியை குப்பையாக்காதீர்கள் என்று அறிவுரை வேறு. 

இதற்கு விண்வெளியை பாதுகாக்க வேண்டும் என்ற எண்ணம் இல்லை. பல விஷயங்களுக்கு அவர்களை நம்ப வேண்டியது இல்லை. பக்கத்துநாட்டுக்காரன் செயற்கை கோளை தாக்கி அழித்துவிட்டு, எங்களை வேவு பார்த்தான் சார் என்று அறிக்கைவிடும் அபாயம் இருப்பது தான் காரணம். 

சரி ரொம்ப உணர்ச்சிவசப்பட்டு பொருளாதாரத் தடை விதிக்கலாமே. ஆனால் சீனா அமெரிக்கா பொருளாதாரப் போர் தொடர்கிறது. ஜப்பான், சீனா, ரஷ்யா, அமெரிக்கா போன்ற நாடுகள் இணைந்து 2ம் உலகப் போரில் கொரியா என்ற தேசத்தை தங்கள் ஆடுகளாக மாற்றி வடகொரியா, தென் கொரியா என பிரித்துவிட்டு மோதலை உருவாக்கிய சூழ்நிலையில் தற்போது வடகொரிய அதிபர் சிவகாசிகாரர்களுக்கு இணையாக ராக்கெட் விட்டுக் கொண்டு இருக்கிறார். இந்த நிலையில் இந்தியா மீதும் பொருளாதாரத் தடை என்றால் அமெரிக்கா தலையில் துண்டு போட்டுக் கொண்டு தான் போக வேண்டி இருக்கும். புல்வாமா தாக்குதலில் கூட இந்தியர்களை தவிர்த்து யாரும் எதிர்க்கவில்லை.

இதையெல்லாம் கணக்கு போட்டு தான் அமெரிக்கா வடிவேலு ஸ்டைலில் நடவடிக்கை எடுத்து தன்னை பெரிய ஆளாக காட்டி இருக்கிறது. இதையெல்லாம் புரிந்து கொள்ளலாமல் கோ பேக் மோடி என்றோ, 72 ஆயிரம் ரூபாய் கட்டாயம் கிடைக்கும் என்றோ ராகுலையோ, அல்லது 3வது அணியை சேர்ந்த ஏதாவது ஒரு சாகுலையோ பிரதமராக அமர்த்தினால் உலக நாடுகள் இந்தியாவை வச்சு, செஞ்சுறும். அவ்வளவு வம்பு இழுத்துக் கொண்டிருக்கிறோம். இந்தியா என்றால் நீங்களும், நானும் தான் பாஸ். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP