பிரேசில் முன்னாள் அதிபர் சிறைக்கு செல்வது உறுதியாகியுள்ளது.

ஊழல் வழக்கில் தண்டிக்கப்பட்ட பிரேசில் முன்னாள் அதிபர் லூயிஸ் இனாசியோ லுலா டா சில்வா, மேல்முறையீடு காலத்தில் தான் சிறையில் அடைக்கப்படாமல் வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை, நீதிபதி தள்ளுபடி செய்ததை தொடர்ந்து, ஒரு வார காலத்திற்குள் லுலா சிறைக்கு செல்வது உறுதியாகி உள்ளது.
 | 

கடந்த 2003 முதல் 2011-ம் ஆண்டு வரை பிரேசில் அதிபராக பதவி வகித்த  லுலா மீது அரசு எண்ணெய் நிறுவனத்தின் பணி ஒப்பந்தம் அளிப்பதற்காக ஒரு என்ஜினீயரிங் கம்பெனியிடம் இருந்து ஒரு மில்லியன் டாலர் (சுமார் ரூ. 6½ கோடி) லஞ்சம் பெற்றதாக குற்றம் சாட்டப்பட்டு, வழக்கு தொடரப்பட்டது.  கடந்த ஆண்டு ஆகஸ்டு மாதம்  இந்த  வழக்கை விசாரித்த நீதிபதிகள் அவர் குற்றவாளி என நிரூபிக்கபட்டதை தொடர்ந்து, அவருக்கு 10 ஆண்டு சிறைத்தண்டனை விதித்து தீர்ப்பு அளித்தது. அந்த தீர்ப்பை எதிர்த்து லுலா நீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தார். இதனை விசாரித்த நீதிமன்றம், அவருக்கு விதிக்கப்பட்ட 10 ஆண்டு சிறைத்தண்டனையை 12 ஆண்டுகளாக உயர்த்தி சென்ற ஜனவரி மாதம் தீர்ப்பு அளித்தது.

இதனை தொடர்ந்து லுலா இந்த தீர்ப்பையும் எதிர்த்து மேல் முறையீடு செய்ய தீர்மானித்தார். மேலும்  மேல்முறையீடு காலத்தில் தான் சிறையில் அடைக்கப்படாமல் வெளியே இருக்க அனுமதிக்க வேண்டும் என்று உச்ச நீதிமன்றத்தில் அளித்த மனுவை, பெண் நீதிபதி  ரோசா வெப்பர் தள்ளுபடி செய்து விட்டார், இதனால்  லுலா சிறைக்கு செல்வது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. 

பிரேசிலில் வரும் அக்டோபர் மாதம் நடைபெற உள்ள  அதிபர் தேர்தலில் லுலா போட்டியிட இருந்தார். ஆனால் இப்போது அவர் சிறைக்கு செல்வதால்  அதிபர் தேர்தலில் போட்டியிட முடியாத நிலை உருவாகியுள்ளது குறிப்பிடத்தக்கது.

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP