ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஓ ஆகும் சென்னை பெண் திவ்யா!

அமெரிக்காவின் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக இந்திய வம்சாவளிப் பெண் திவ்யா சூர்யதேவாரா (39) பதவியேற்கவுள்ளார்.
 | 

ஜெனரல் மோட்டார்ஸின் சி.எஃப்.ஓ ஆகும் சென்னை பெண் திவ்யா!

சென்னையில் பிறந்து, சென்னை பல்கலைக்கழத்தில் படித்த திவ்யா சூர்யதேவரா அமெரிக்காவின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு நிறுவனமான ஜெனரல் மோட்டார்ஸ் (ஜிஎம்) நிறுவனத்தின் தலைமை நிதி அதிகாரியாக (சி.எஃப்.ஓ) நியமிக்கப்பட்டுள்ளார். 

இந்திய பெண் மோட்டார் துறையில் நிகழ்த்திய சாதனையின் பின்னணி இதோ... 

திவ்யா சூர்யதேவாரா, சென்னையில் பிறந்து வளர்ந்தவர். சென்னை பல்கலைக் கழகத்தில் வணிகவியல் பட்டம் பெற்றவர். மேற்படிப்புக்காக 22 வயதில் அமெரிக்கா சென்று, ஹார்வர்டு பல்கலைக்கழகத்தில் எம்.பி.ஏ படித்தார். 

தற்போது திவ்யா ஜெனரல் மோட்டார்ஸின் நிதி பிரிவின் துணைத் தலைவராக இருக்கிறார். 11 மாதங்களுக்கு முன்பு அவர் இந்த பொறுப்பேற்றார். தற்போதைய தலைமை நிதி அதிகாரியாக இருக்கும் சக் ஸ்டீவன்ஸ் வரும் செப்டம்பர் 1-ம் தேதியுடன் ஓய்வு பெறுவதை அடுத்து, புதிதாக அந்த பதவிக்கு திவ்யா நியமிக்கப்பட்டுள்ளார்.  

அதற்கு முன்பாக, கடந்த 2013-ம் ஆண்டு முதல் 2017-ம் ஆண்டு வரை, ஜெனரல் மோட்டார்ஸ் அஸெட் மேனேஜ்மென்ட் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை முதலீட்டு அதிகாரியாக இருந்தார்.

இந்த காலகட்டத்தில், நிதி திட்டமிடல், முதலீட்டாளர் தொடர்பு, புதிய திட்டங்களை கண்காணித்து வந்தார் திவ்யா. 

திவ்யாவின் தலைமை பண்பின் காரணமாக கடந்த சில ஆண்டுகளில் நல்ல முடிவு கிடைத்திருப்பதாக தலைமைச் செயல் அதிகாரி மேரி பாரா தெரிவித்திருக்கிறார்.

மோட்டார் நிறுவனத் துறையில் ஒரு பெண் தலைமை நிதி அதிகாரியாக பதவியேற்பது இது முதல் முறையாகும்.

ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக 2014-ம் ஆண்டு மேரி பாரா நியமனம் செய்யப்பட்டார். இந்த நிறுவனத்தின் முதன் பெண் தலைமைச் செயல் அதிகாரி இவர்தான்.

மோட்டார்த் துறையில் தலைமைச் செயல் அதிகாரி மற்றும் தலைமை நிதி அதிகாரி உள்ளிட்ட அதி முக்கியமான பொறுப்பிலும் பெண்கள் நியமனம் செய்யப்பட்டிருப்பது முதன்முதலில் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் தான் என்பதும் கூடுதல் பெருமை. 

2005-ம் ஆண்டு முதல் ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனத்தில் பணியாற்ற தொடங்கிய இவர், அதற்கு முன்பாக யூபிஎஸ், பிரைஸ்வாட்டர்ஹவுஸ் ஆகிய நிறுவனங்களில் பணியாற்றினார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP