ஜமால் கஷோகியின் மரணம் பெரும் துயரம்: ஐ.நா, வெள்ளை மாளிகை இரங்கல்

சவுதி அரேபியாவில் கொல்லப்பட்ட பத்திரிகையாளர் ஜமால் கஷோக்கியின் மரணம் ஆழ்ந்த துயரத்தையும் வருத்தத்தையும ஏற்படுத்தியுள்ளதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. விரிவான விசாரணைக்கு ஐ.நா-வும் வலியுறுத்தியுள்ளது.
 | 

ஜமால் கஷோகியின் மரணம் பெரும் துயரம்: ஐ.நா, வெள்ளை மாளிகை இரங்கல்

சவுதி அரேபியாவில் கொல்லப்பட்ட பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கியின் மரணம் ஆழ்ந்த துயரத்தையும் வருத்தத்தையும ஏற்படுத்தியுள்ளதாக  வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டுள்ளது. 

ஜமால் கஷோகி துருக்கி தலைநகர் இஸ்தான்புல்லில் உள்ள சவுதி தூதரகத்திற்குள் கொல்லப்பட்டது உண்மைதான் என சவுதி அரேபியா ஒப்புக்கொண்டுள்ளது. தூதரகத்திற்குள் நடந்த சண்டையில் இந்த கொலை அரங்கேறியதாக தெரிவித்துள்ளது. இந்த கொலையில் தொடர்புடைய 18 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர். மேலும் உயர் புலனனாய்வு அதிகாரிகள் மற்றும் பட்டத்து இளவரசர் முகமது பின் சல்மானின் உதவியாளர்களான அகமது அல்-அஸ்ஸீரியையும் அரசாங்கத்தின் ஊடக ஆலோசகர் சவுத் அல்-கட்டானி ஆகியோரை சவுதி அரேபியா பதவி நீக்கம் செய்துள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளது. 

இதுகுறித்து சவுதி அரேபியாவின் அட்டர்னி ஜெனரல் அல்- மஜாப் கூறுகையில் ‘சவுதி அரேபிய தூதரகத்தில் ஜமால் சந்திக்கச் சென்ற நபருடன் அவருக்கு மோதல் ஏற்பட்டுள்ளது. அந்த மோதலில் ஜமால் இறந்திருக்கலாம். முதல்கட்ட விசாரணையில் இறுதி உறுதிப்படுத்தப்பட்டுள்ளது’’ எனக் கூறியுள்ளது. எனினும் அவரை யார் கொன்றது, அவரது உடல் எங்கே என்ற விவரங்களை அவர் தெரிவிக்கவில்லை.

இந்த நிலையில்,  தனது ட்விட்டர் பக்கத்தில் வெள்ளை மாளிகையின் செய்தித்தொடர்பு செயலாளர் சாரா சாண்டரஸ், பத்திரிக்கையாளர் ஜமால் கஷோக்கியின் மரணத்துக்கு ஆழ்ந்த வருத்தத்தை தெரிவித்துக் கொள்வதாகவும், அவரது குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு இரங்கலை தெரிவித்துக் கொள்வதாகவும் குறிப்பிட்டுள்ளார். 

ஐ.நா பொதுச்செயலாளரின் செய்தித்தொடர்பாளர் வெளியிட்டுள்ள அறிக்கையில், ஜமால் கஷோக்கியின் கொலை மிகவும் துயரம் அளிப்பதாகவும், இந்த  சம்பவம் குறித்து விரிவான விசாரணை தேவை எனவும் குறிப்பிடப்பட்டுள்ளது. 

ட்ரம்ப் எச்சரிக்கை

சவுதி அரேபியாவைச் சேர்ந்த பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொலை செய்யப்பட்டு விட்டதாக, தகவல்கள் வெளியாகி உள்ளன.இது குறித்து நேற்று, அமெரிக்க அதிபர் டொலான்டு ட்ரம்ப் கூறியதாவது:பத்திரிகையாளர் ஜமால் கஷோகி கொல்லப்பட்டு விட்டதாக தகவல்கள் கிடைத்துள்ளன. அப்படி இருக்கும்பட்சத்தில், அது மிகவும் துயரமானது. அதற்கான கடும் விளைவுகளை, சவுதி அரேபியா சந்திக்க நேரிடும்.இவ்வாறு அவர் கூறினார்.

 

தொடர்புடையவை: 'தலைதுண்டித்து பத்திரிகையாளர் படுகொலை' - சரிகட்ட அமெரிக்காவுக்கு 700 கோடி ரூபாய்!

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP