அமெரிக்காவில் எச் 4 விசா-வில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கு வந்தது நெருக்கடி 

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு தங்க வழங்கப்படும் எச் 4 விசா விதிமுறைகள் 3 மாதங்களில் மாற்றப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது.
 | 

அமெரிக்காவில் எச் 4 விசா-வில் வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கு வந்தது நெருக்கடி 

அமெரிக்காவில் பணியாற்றும் வெளிநாட்டினர் மனைவி மற்றும் குழந்தைகள் அங்கு தங்க வழங்கப்படும் எச் 4 விசா விதிமுறைகள் 3 மாதங்களில் மாற்றப்படும் என அந்நாட்டு அரசு அறிவித்துள்ளது. இதனால் அங்கு பெரும்பாண்மையாக வசிக்கும் இந்திய குடும்பங்களுக்கு சிக்கல் ஏற்பட்டுள்ளது. 

அமெரிக்காவில் உள்ள தொழில்நுட்ப நிறுவனங்களில் மற்ற அயல் நாட்டவரைக் காட்டிலும் பெரும்பான்மையாக இந்தியர்களும் சீனர்களும் தங்கி பணியாற்றுகின்றனர்.  அங்கு தங்கி பணியாற்றுபவர்களுக்கு எச்-1பி விசா வழங்கப்படுகிறது. இந்த விசா 3 ஆண்டுகள் வரை செல்லுபடி ஆகிறது. 

இவர்களுக்கு ட்ரம்ப் அதிபர் பதவி ஏற்றது முதல் பல நெருக்கடியான விதிமுறைகள் வகுக்க திட்டமிடப்பட்டது.  அமெரிக்க வேலை அமெரிக்கர்களுக்கே என்ற அடிப்படையில் செயல்பட்டு வரும் ட்ரம்ப் ஆட்சியில் எச்-1பி விசாவில் பல கட்டுப்பாடுகளும், பரிசீலனையில் கடும் நெறிமுறைகளும் பின்பற்றப்படுகின்றன. விண்ணப்பத்தில் மிகச்சிறிய குறை இருந்தாலும், அந்த விண்ணப்பத்தை உடனடியாக நிராகரிக்க அமெரிக்க குடியேற்றத்துறைக்கு அரசு உத்தரவிட்டுள்ளது.
 
எச் 1பி விசாவில் பணியாற்ற செல்லும் ஊழியர்களின் குடும்பத்தினர் அமெரிக்காவில் தங்கி இருக்க எச்-4 விசா வழங்கப்படுகிறது. இந்த விசாவும் மிக குறைந்த எண்ணிக்கையிலேயே வழங்கப்படுகிறது. இந்த நிலையில் இந்த விசாவை 3 மாதத்துக்கு நிறுத்தி வைக்க அமெரிக்க நிர்வாகம் முடிவு செய்துள்ளது. இதுகுறித்து பெடரல் நீதிமன்றத்தில் அமெரிக்க அரசு சார்பில் தாக்கல் செய்யப்பட்டுள்ள மனுவில் குறிப்பிடுகையில், எச்-4 விசா விதிமுறைகளில் பல மாற்றங்கள் செய்ய முடிவு செய்யப்பட்டுள்ளது. எச்-1பி விசா விதிமுறைகளில் செய்யப்பட்டுள்ள மாற்றங்களுக்கு ஏற்ப இந்த விதிமுறைகளிலும் மாற்றங்கள் செய்யப்படும். முந்தைய அரசால் அதிகஅளவில் இதுபோன்ற விசாக்கள் வழங்கப்பட்டதால் உள்ளூர் ஊழியர்கள் பாதிக்கப்பட்டனர். எனவே இந்த விசா விதிமுறைகளில் புதிய மாற்றங்கள் செய்யப்படும். இதற்கான பரிந்துரை 3 மாதங்களில் அரசிடம் தாக்கல் செய்யப்படும்'' என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Newstm.in 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP