சிஎன்என் நிருபரின் வெள்ளை மாளிகை அனுமதி திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, சிஎன்என் நிருபருக்கு வழங்கப்பட்ட வெள்ளை மாளிகை அனுமதி ரத்து செய்யப்பட்டது. அதை அவருக்கு திருப்பி வழங்க அமெரிக்க மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
 | 

சிஎன்என் நிருபரின் வெள்ளை மாளிகை அனுமதி திருப்பிக் கொடுக்க உத்தரவிட்டது நீதிமன்றம்

அமெரிக்க அதிபர் டொனால்ட் ட்ரம்ப்புடன் ஏற்பட்ட வாக்குவாதத்தை தொடர்ந்து, சிஎன்என் நிருபரின் வெள்ளை மாளிகை அனுமதி ரத்து செய்யப்பட்ட நிலையில், அதை அவருக்கு திருப்பி வழங்க அமெரிக்க மத்திய நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. 

தேர்தல் பிரச்சாரத்தின் போது சிஎன்என் செய்தி நிறுவனத்துடன் பல்வேறு சர்ச்சைகளில் ஈடுபட்டார் டொனால்ட் ட்ரம்ப். அதிபரானபின், வெள்ளை மாளிகைக்கு சிஎன்என் நியமித்த நிருபரை ட்ரம்ப் கடுமையாக சாடி வந்தார். சமீபத்தில் அந்த நிருபர் ஜிம் அகோஸ்டா, பத்திரிகையாளர் சந்திப்பின் போது, தேர்தல் தோல்வி பற்றி கேள்வி எழுப்பினார். அப்போது ட்ரம்ப் அந்த நிருபருடன் வாக்குவாதத்தில் ஈடுபட்டார். நிருபரையும் சிஎன்என் நிறுவனத்தையும் ட்ரம்ப் எல்லோர் முன்னிலையிலும் கடுமையாக விமர்சனம் செய்தார்.

அப்போது வெள்ளை மாளிகை பெண் அதிகாரி ஒருவர், மைக்கை பிடுங்க நிருபருக்கு அருகே வந்தார். தரமுடியாது என விடாப்பிடியாக மைக்கை வைத்திருந்த அந்த நிருபர், பெண் அதிகாரியை தாக்கியதாக வெள்ளை மாளிகை அறிக்கை வெளியிட்டது. ஆனால் வீடியோ பதிவுகளில், அகோஸ்டா எந்த தவறும் செய்யவில்லை என்பது தெளிவாக தெரிந்தது. ஆனால், அந்த பெண்ணை தாக்கியதாக கூறி அவருக்கு வழங்கப்பட்டிருந்த வெள்ளை மாளிகை அனுமதி ரத்து செய்யப்பட்டது. 

இந்நிலையில் இந்த விவகாரம் தொடர்பாக வெள்ளை மாளிகை மீது வழக்கு தொடுத்தது சிஎன்என். இந்த வழக்கை மத்திய நீதிமன்றம் விசாரித்து, நிருபர் எந்த தவறும் செய்யவில்லை என தீர்ப்பளித்தது. நீதிபதிகள் அவருக்கு வழங்கப்பட வேண்டிய வெள்ளை மாளிகை அனுமதியை உடனடியாக திருப்பி தர உத்தரவிட்டுள்ளன.

newstm.in
 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP