டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: ஒபாமா வருத்தம்

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு டிரம்ப் தவறு இழைத்துவிட்டார் என அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.
 | 

டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: ஒபாமா வருத்தம்

டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: ஒபாமா வருத்தம்

ஈரான் நாட்டுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்ததன் மூலமாக டிரம்ப் மிகப்பெரிய தவறு இழைத்துவிட்டார் என  அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா வருத்தம் தெரிவித்துள்ளார். 

கடந்த 2015ம் ஆண்டு ஈரான் நாட்டுடன் அமெரிக்கா, பிரிட்டன், பிரான்ஸ், ஜெர்மனி, சீனா, ரஷ்யா ஆகிய நாடுகள் இணைந்து அணுசக்தி ஒப்பந்தம் செய்துகொண்டன. இதையடுத்து ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தம் முற்றிலும் ஆபத்தானது, அமெரிக்க நாட்டின் ஒரு குடிமகனாக இந்த ஒப்பந்தம் என்னை வருத்தமடையச் செய்கிறது என டிரம்ப் கூறியிருந்தார்.

ஈரான் உடனான ஒப்பந்தத்தை அமெரிக்கா விரைவில் முறித்துக்கொள்ளும் எனவும் அவர் கடந்த சில நாட்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். அதன்படி நேற்று ஈரான் அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலகுவதாக அதிகாரபூர்வமாக டிரம்ப் அறிவித்தார். டிரம்ப்-பின் இந்த முடிவை அடுத்து அணுசக்தி ஒப்பந்தத்தில் உள்ள மற்ற நாடுகள் வருத்தம் தெரிவித்துள்ளன. ஆனால் டிரம்ப்-பின் முடிவுக்கு இஸ்ரேல் மட்டும் மகிழ்ச்சியை தெரிவித்துள்ளது. 

இந்நிலையில் அமெரிக்க முன்னாள் அதிபர் பாராக் ஒபாமா அணுசக்தி ஒப்பந்த விலகல் குறித்து கருத்து தெரிவித்துள்ளார். அவர், 'ஈரானுடனான அணுசக்தி ஒப்பந்தத்தை முறித்துக்கொண்டு டிரம்ப் பெரும் தவறு இழைத்துவிட்டார். ஈரான் இதுவரை தான் செய்த ஒப்பந்தத்தை மீறி செயல்பட்டதில்லை.

டிரம்ப் செய்தது மிகப்பெரிய தவறு: ஒபாமா வருத்தம்

அணுசக்தி தொடர்பான அவர்களது நடவடிக்கைகளை மற்ற நாடுகள் கண்காணித்துக்கொண்டு தான் இருக்கின்றன. அப்படியிருக்க ஒப்பந்தத்தில் இருந்து விலக வேண்டிய அவசியமில்லை. மேலும், இதனால் மற்ற நாடுகளின் மத்தியில் அமெரிக்காவின் நம்பகத்தன்மை குலையும். நாட்டில் அரசியல் சூழ்நிலைகள் மாறலாம். யார் வேண்டுமானாலும் ஆட்சிக்கு வரலாம். ஆனால் நாட்டின்(அமெரிக்கா) பாதுகாப்பு நமக்கு மிக முக்கியம்" என தெரிவித்துள்ளார். 

ஒபாமா, அமெரிக்க அதிபராக இருந்தபோது கையெழுத்திட்ட ஒப்பந்தம் என்பதால் தான் டிரம்ப் இந்த அணுசக்தி ஒப்பந்தத்தில் இருந்து விலக முடிவு செய்ததாக மற்ற நாடுகள் மத்தியில் பேசப்படுவது குறிப்பிடத்தக்கது. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP