அந்தக் குட்டி நாடு 3ஆம் உலகப் போரை உருவாக்கும்....ட்ரமப் பேச்சு

நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக சேர்ந்த மாண்டிநெக்ரோ, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி பீதியை கிளப்பிவிட்டுள்ளார். இதற்கு அந்த நாடும் தக்க எதிர்வினை அளித்துள்ளது.
 | 

அந்தக் குட்டி நாடு 3ஆம் உலகப் போரை உருவாக்கும்....ட்ரமப் பேச்சு

நேட்டோ உறுப்பு நாடுகளில் ஒன்றாக சேர்ந்த மாண்டிநெக்ரோ, மூன்றாம் உலகப் போரை உருவாக்கும் என்று அமெரிக்க அதிபர் ட்ரம்ப் கூறி பீதியை கிளப்பிவிட்டுள்ளார். இதற்கு அந்த நாடும் தக்க எதிர்வினை அளித்துள்ளது. 

வெறும் சுமார் 6 லட்சம் மக்கள் தொகைக் கொண்ட நாடு தான் மாண்டிநெக்ரோ. இந்த நாடு சமீபத்தில் தான் நேட்டோ நாடுகளில் ஒன்றாக இணைந்தது. 

இந்த நிலையில் நேட்டோ படை குறித்து தொலைகாட்சி ஒன்றற்கு பேசியிருக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்ப், ''நேட்டோ படைகள் உலகப் போரை உருவாக்கும் வல்லமை கொண்டவை. அந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற எல்லா நாடுகளும் சண்டைக்கு செல்லும் என்பது நமக்கு தெரியும். இதனால் அந்த குழுவில் ஒரு சின்ன நாடு தாக்கப்பட்டால் கூட மற்ற நாடுகள் போரை உருவாக்கும். 

இவற்றில் மாண்டிநெக்ரோ தான் மிகவும் மூர்க்கமான நாடு.  குறைவான மக்கள்த தொகை கொண்டிருந்தாலும், அதில் எல்லோருமே மிகவும் மூர்க்கமாக உள்ளார்கள். இதனால் அவர்கள் எப்போது வேண்டுமானாலும் மூன்றாம் உலகப் போர் உருவாக்க காரணமாக இருக்கலாம். அந்த நாடு மூன்றாம் உலகப் போரை உருவாக்க வாய்ப்புள்ளது'' என்றார்.

நேட்டோ என்பது 29 நாடுகள் கொண்ட கூட்டமைப்பு.  இந்த குழுவில் ஒரு நாடு தாக்கப்பட்டால், மற்ற அனைத்து நாடுகளும் சேர்ந்து எதிர் நாட்டின் மீது போர் தொடுக்க செல்லும். ஒரு சிறிய நாடு தாக்கப்பட்டால் கூட, அதே நிலை தான்.  இத்தகைய பட்டியலில் சமீபத்தில் இணைந்த மாண்டிநெக்ரோவில் மொத்தம் சுமார் 2 ஆயிரம் ராணுவ வீரர்கள் தான் 6 லட்சம் மக்களுக்காக இருக்கின்றனர். 

இத்தகைய நாட்டை தான் அமெரிக்க அதிபர் 3ஆம் உலகப் போரை ஆரம்பிக்கும் என்றுக் கூறியுள்ளார். 

நாங்கள் அப்படி எல்லாம் இல்லை....

ட்ரம்பின் பேச்சால் தான் இத்தகைய நாடு இருப்பதே பலருக்கும் தெரியவந்துள்ளது. ட்ரம்ப்பின் பேச்சுக்கு மாண்டிநெக்ரோவின் வெளியுறவுத் துறை அமைச்சர் ஸ்டார்ஜன் டாப்மொநோவிக் கூறுகையில், "நாங்கள் அப்படிப் பட்ட நாடே இல்லை. அமைதியாக ஆழ்கிறோம். அதைத் தான் விரும்புகிறோம். ட்ரம்பின் பேச்சு மிகவும் நகைச்சுவையாக இருக்கிறது. நாங்கள் இன்னும் வளரவே இல்லை"  என்றிருக்கிறார். 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP