டெக்சஸ் பார்சல் வெடிகுண்டு விவகாரம்: குற்றவாளி தற்கொலை

அமெரிக்காவின் டெக்சஸ் மாகாணத்தில் கடந்த சில வாரங்களாக தொடர்ந்து கொரியர் பார்சல்கள் மூலம் குண்டுவெடிப்பு சம்பவங்கள் நடந்து வந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
 | 

இதுவரை இந்த குண்டுவெடிப்புகளில் இரண்டு பேர் கொல்லப்பட்டுள்ளனர். நேற்று இரண்டு பார்சல்கள் வெடித்ததில், கொரியர் நிறுவன ஊழியர் காயமடைந்தார். இந்த தொடர் சம்பவங்களால் டெக்சஸ் மாகாண மக்கள் பதற்றத்தில் இருந்தனர். 

தொடர் விசாரணையின் முடிவில், அமெரிக்க உளவுத்துறை இன்று குற்றவாளி என சந்தேகப்பட்டு ஒரு நபரை நெருங்கினர். ஓட்டலின் பார்க்கிங்கில்  தனது காரில் அந்த நபர் இருந்ததை கண்டு, அதிரடி படையினருக்கு தகவல் கொடுத்துவிட்டு அதிகாரிகள் காத்திருந்தனர். உளவுத்துறை அதிகாரிகளை கண்டுகொண்ட அந்த நபர் அங்கிருந்து தப்பிக்க முயற்சி செய்துள்ளார். அப்போது அதிரடி படையினர் சுற்றி வழைக்க, தன்னிடம் இருந்த ஒரு வெடிகுண்டை வெடிக்கச் செய்தான். அப்போது ஒரு போலீஸ் அதிகாரி அவனை நோக்கி சுட்டதாக கூறப்படுகிறது.  இதில் குற்றவாளி பலியானார். வெடிகுண்டில் இறந்தாரா அல்லது போலீஸ் அதிகாரி சுட்டதில் இறந்தாரா என சரியாக தெரியவில்லை.

குற்றவாளியின் பெயர், மார்க் ஆண்டனி கோடிட் என்றும் அவரது வயதும் 24 என்றும் தகவல்கள் கிடைத்துள்ளன. 

newstm.in

recommended for you

எடிட்டர் சாய்ஸ்

வீடியோ

NEWSTM TOP